News January 15, 2026
சென்னையில் டாஸ்மாக் மூடல்

சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு மதுபானம் சில்லறை விற்பனை விதிகள் விதிகளின் கீழ் சென்னை மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் (எப்.எல்.1) சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், எப்.எல்.2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள், எப்.எல்.3 உரிமம் கொண்ட ஓட்டல்களை சார்ந்த பார்கள், நாளை மற்றும் 26ஆம் தேதி மூடப்படுகிறது என தெரிவித்திருந்தார்.
Similar News
News January 26, 2026
சென்னை ரவுடிக்கு அரிவாள் வெட்டு

ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் தென்றல் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன்(19). கல்லூரி மாணவரான இவர், தென்றல் நகர் 9-வது தெருவில் பைக்கில் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. அதே பகுதியை சேர்ந்த ரவுடியான ஆதிகேசவன்(24). வேகமாக சென்றதை தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேசன் தனது 3 நண்பர்களுடன் வந்து ஆதிகேசவன் தலையில் கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனர். புகாரின் பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
News January 26, 2026
சென்னை அருகே கோரவிபத்து; பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து

கேரளாவில் இருந்து வந்த பேருந்து கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு கோயம்பேடுக்கு செல்ல வேண்டிய சுமார் 18 பயணிகளுடன் தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலை வழியாக சென்று கொண்டிருந்தது. பல்லாவரம் அடுத்த திருநீர்மலை அருகே வரும்போது திடீரென பஸ்சின் முன்புற வலது பக்க டயர் வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சுமார் 10 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் 20 பேர் காயமடைந்தனர்.
News January 25, 2026
சென்னை: உங்களிடம் VOTER ID உள்ளதா?

உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <


