News January 15, 2026

நவல்பட்டு: துணை முதல்வரை வரவேற்ற ஆட்சியர்

image

திருச்சி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு மைதானம் திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று திருச்சி வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் சரவணன் பூங்கொத்து வழங்கி வரவேற்பளித்தார். இந்நிகழ்வில் அரசு துறை அலுவலர்கள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News

News February 15, 2026

திருச்சி: ரூ.2.10 லட்சம் மானியம்!

image

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டத்தில் மாட்டு கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதில் 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-மும், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News February 15, 2026

திருச்சி: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

திருச்சி மக்களே உங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். இதனை SHARE செய்து மற்றவர்களுக்கும் தெரியபடுத்துங்க.

News February 15, 2026

திருச்சி: இனி ஒரு மிஸ்டு கால் போதும்!

image

திருச்சி மக்களே கேஸ் சிலிண்டர் புக் பண்ண இனி ஒரு மிஸ்டு கால் கொடுத்தா போதும். அதற்கு Bharatgas: 77150 12345, HP: 94936 02222, Indane: 84549 55555 ஆகிய எண்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தா… கேஸ் புக் பண்ண SMS உங்க போனுக்கு வரும்.சிலிண்டர் இணைப்புடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரில் இருந்துதான் மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.!

error: Content is protected !!