News January 15, 2026
திண்டுக்கல்: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) சென்னை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்
Similar News
News January 26, 2026
திண்டுக்கல்லில் குடியரசு தின விழா

நமது இந்திய திருநாட்டின் 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில், மாவட்ட ஆட்சியர் சரவணன் இன்று காலை 8.05 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றினார். தொடர்ந்து காவல், தீயணைப்பு, ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பை பார்வையிட்டு மரியாதை பெற்றார். பின்னர் சமாதானத்தின் அடையாளமாக வெண்புறாக்களும் வண்ண பலூன்களும் பறக்கவிடப்பட்டன.
News January 26, 2026
திண்டுக்கல்: ரூ.6 செலுத்தினால் ரூ.1 லட்சம் கிடைக்கும்

திண்டுக்கல் மக்களே, போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். ( நல்ல தகவலை SHARE பண்ணுங்க)
News January 26, 2026
திண்டுக்கல்: பண்ணை தொழிலுக்கு ரூ.20 லட்சம்!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <


