News January 15, 2026
ஈரோட்டில் கேஸ் புக் பண்ண புது வழி!

ஈரோடு மக்களே, நீங்கள் புக் செய்த சிலிண்டர் வர தாமதமாகுதா? இனி டென்ஷன் வேண்டாம். Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122 இந்த எண்களை போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘HI’ என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.
Similar News
News January 31, 2026
கோபி அருகே சிறுமிக்கு ஆபாச வசவு: ஒருவர் கைது

கோபி அருகே அவ்வையார்பாளையத்தைச் சேர்ந்த ராஜசேகர், பள்ளிச் சிறுமியை ஆபாசமாகத் திட்டியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் சிறுவலூர் போலீசில் புகாரளித்ததால், ஆத்திரமடைந்த ராஜசேகர் மற்றும் அவரது தம்பி, சிறுமியின் வீட்டிற்கே சென்று அவர்களைத் தாக்கினர். இதில் ரத்தக் காயமடைந்த பெற்றோர் கோபி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து ராஜசேகரை கைது செய்தனர்.
News January 31, 2026
சென்னிமலையில் வசமாக சிக்கிய திருடன்!

சென்னிமலை வாரச்சந்தை எதிரே நேற்று மாலை முகாசி பிடாரியூரைச் சேர்ந்த மனோகரன் (64) என்பவர் நிறுத்தியிருந்த டிவிஎஸ் வாகனத்தை மர்ம நபர் திருடினார். இதைக் கண்ட மனோகரன், சற்றும் தாமதிக்காமல் மற்றொரு வாகனத்தில் திருடனை விரட்டிச் சென்று முத்தையன் கோவில் பஸ் ஸ்டாப் அருகே மடக்கிப் பிடித்தார். பிடிபட்ட சேலம் எடப்பாடியைச் சேர்ந்த மணிவேல் (41) என்பவரை போலீசில் ஒப்படைத்தார். அவரிடமிருந்து வாகனம் மீட்கப்பட்டது.
News January 31, 2026
ஈரோடு கலெக்டர் அதிரடி உத்தரவு!

ஈரோடு மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தோட்டத்தில் பனை மரங்கள் பயிரிடப்பட்டுள்ளது. இந்தப் பனை மரங்கள் பல்வேறு மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது. பல்வேறு கலைப் பொருட்கள், பதநீர் போன்றவற்றிற்காக மக்கள் பலர் இதனை சார்ந்து வாழ்கின்றனர். அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் பனை மரங்கள் வெட்ட ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவரின் அனுமதி கடிதம் இல்லாமல் வெட்டக்கூடாது என மாவட்ட ஆட்சித் தலைவர் சி கந்தசாமி தெரிவித்துள்ளார்.


