News January 15, 2026
அரசியல் தலைவர்களின் Pongal Celebration Clicks!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. காலையிலேயே குளித்து புத்தாடைகள் அணிந்து லட்சக்கணக்கானோர் பொங்கலிட்டு வருகின்றனர். இந்நிலையில், புத்தரிசி, கரும்பு, வெல்லமுமாக பானையில் பொங்கல் பொங்கி வருவதை பார்த்து அரசியல் தலைவர்கள் பலர் கொண்டாடியுள்ளனர். அந்த புகைப்படங்களை பார்க்க மேலே உள்ள போட்டோக்களை SWIPE செய்யுங்கள்.
Similar News
News April 6, 2026
ஈரான் போரை நிறுத்த பாகிஸ்தான் கொடுத்த ப்ளான்

ஈரானுக்கும் USA-வுக்கும் இடையே பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து வருகிறது. இதன் ஒருபகுதியாக PAK ராணுவ தளபதி முனீர், USA துணை அதிபர் JD வான்ஸ் & ஈரான் அமைச்சர் அராக்சி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதன் விளைவாக, போரை நிறுத்துவதற்கான திட்டம் ஒன்றை இருநாடுகளுக்கும் பாகிஸ்தான் அனுப்பிவைத்துள்ளதாம். இதில் உடன்பாடு எட்டப்பட்டால் 1 வாரத்திற்குள் போர் நின்று, ஹார்முஸ் நீரிணை திறக்கப்படலாம் என கூறப்படுகிறது.
News April 6, 2026
ஜவுளித் துறையையும் விட்டு வைக்காத ஈரான் போர்!

போர் சூழல் காரணமாக வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஜவுளிகள் மிகப்பெரிய அளவில் தேக்கம் அடைந்துள்ளன. இதையடுத்து கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இன்று முதல் 50% உற்பத்தியை குறைக்க ஜவுளி உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர். நூல் விலை ஏற்றமும் உற்பத்தியை குறைப்பதற்கான காரணங்களில் ஒன்று என அவர்கள் கவலை தெரிவித்தனர்.
News April 6, 2026
BREAKING: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை 5,000-க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடைசி நாளான இன்று மட்டும் 2,000 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறும். மனுக்களை திரும்பப் பெற ஏப்.9-ம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும்.


