News May 5, 2024
இ-பாஸ் பெறுவதற்கான இணையதள முகவரி

நீலகிரி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வோர் இ-பாஸ் பெறுவதற்கான இணையதள முகவரி அறிவிக்கப்பட்டது. போக்குவரத்து நெரிசலை குறைக்க மே 7-ஜூன் 30 வரை ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம் என ஐகோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, சுற்றுலா செல்வோர் <
Similar News
News August 14, 2025
அரசு ஊழியர்கள் திமுகவை எதிர்ப்பார்கள்: அன்புமணி

ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் திமுக அரசை எதிர்க்க வேண்டுமென்ற நிலைக்கு வந்துவிட்டதாக அன்புமணி தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டியில் மக்கள் மத்தியில் பேசிய அவர், இந்தியாவில் 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியம் திட்டம் உள்ளது. ஆனால் தமிழகத்தில் தற்போது வரை இல்லை என்றார். இடஒதுக்கீடு வழங்கும்படி CM ஸ்டாலினை சந்தித்து தான் முறையிட்டதாகவும், ஆனால் அதனை தர அவருக்கு மனமில்லை என்றார்.
News August 14, 2025
அர்ஜூன் டெண்டுல்கருக்கு திருமண நிச்சயதார்த்தம்

முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. மும்பையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ரவிகாயின் பேத்தியான சானியா சந்தோக் என்பவரை அவர் திருமணம் செய்யவுள்ளார். இருகுடும்பங்களின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே நிச்சயதார்த்தில் பங்கேற்றுள்ளனர். மும்பையில் செல்லப் பிராணிகளுக்கான ‘மிஸ்டர் பாவ்ஸ்’ என்ற சலூனை சானியா நடத்தி வருகிறார்.
News August 14, 2025
தமிழிசையை தடுத்த திமுகவுக்கு விரைவில் முடிவு: நயினார்

முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை சந்திக்க கிளம்பிய போது அவரது வீட்டிலேயே தடுத்து நிறுத்தப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்த நயினார், உரிமைகளை கேட்டு போராடுபவர்களையும், அவர்களுக்கு ஆதரவு அளிப்பவர்களையும் கைது செய்து, ஜனநாயக குரல்வளையை நெரிக்கும் திமுக அரசுக்கு விரைவில் முடிவு கட்டப்படும் என தெரிவித்துள்ளார்.