News January 15, 2026
BREAKING: பொங்கல் நாளில் விஜய்க்கு அதிர்ச்சி

‘ஜன நாயகன்’ விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் இன்று நல்லதொரு உத்தரவை வழங்கும் என காத்திருந்த விஜய் தரப்புக்கு <<18862962>>மனு தள்ளுபடியானது<<>> அதிர்ச்சியை அளித்துள்ளது. இதனால், பொங்கல் சினிமாவுக்கான ரேஸில் இருந்து அதிகாரப்பூர்வமாக ‘ஜன நாயகன்’ படம் வெளியேறிவிட்டது. இதனால், விஜய் ரசிகர்கள் தங்களது சோகத்தை SM-ல் வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனாலும், 20-ம் தேதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.
Similar News
News January 23, 2026
ஆளுநர் உரை நடைமுறையை நீக்க வேண்டும்: CM ஸ்டாலின்

தமிழ்நாட்டைப் போல கேரளா, கர்நாடகாவிலும் ஆளுநர்கள் பிரச்னைகளை ஏற்படுத்துகின்றனர். மாநில அரசு தயாரிக்கும் உரை படிக்க மறுப்பதால், ஆளுநர் உரையுடன் தொடங்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதே இதற்கு தீர்வு என்று கூறியுள்ளார். மேலும், இதற்காக அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவது பற்றி ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் ஆலோசனை நடத்துவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
News January 23, 2026
பிரேசிலுடனான கூட்டு புதிய உச்சங்களை எட்டும்: மோடி

பிரேசில் அதிபர் லூலாவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியது தொடர்பாக X தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இந்தியா-பிரேசில் இடையேயான கூட்டாண்மையில் உள்ள வலுவான முன்னேற்றத்தை நாங்கள் ஆய்வு செய்தோம். இந்தக் கூட்டாண்மை வரும் ஆண்டில் புதிய உச்சங்களை எட்டத் தயாராக உள்ளது. அவரை விரைவில் இந்தியாவிற்கு வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று கூறியிருந்தார்.
News January 23, 2026
உசைன் போல்ட் பொன்மொழிகள்

* உங்கள் கனவுகளை நம்புங்கள், எதுவும் சாத்தியமாகும். * நான் தொடக்கத்தைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்தினேன், முடிவுதான் முக்கியமானது. *மீண்டும் செய்வது எல்லாவற்றையும் விட கடினமானது. *சில நேரங்களில் உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கத் தவறிவிடுகிறீர்கள். *ஒவ்வொருவருக்கும் தங்கள் சொந்த கருத்தைக் கொண்டிருக்க உரிமை உண்டு.


