News May 5, 2024

இரவு 10 மணி வரை இடியுடன் மிதமான மழை பெய்யும்

image

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ஈரோடு, நீலகிரி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடியில் இடி, மின்னலுடன் மிதமான மழையும், சேலம் மற்றும் கோவையில் இடியுடன் லேசான மழையும் பெய்யும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 5, 2025

இரு அவைகளுக்கு 2 மணிவரை ஒத்திவைப்பு

image

ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் முழக்கமிடும்போது அவையின் மையத்திற்கு CISF படையினர் வந்ததற்கு எதிர்கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். இதனால் ஆளும் தரப்புக்கும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அவை 2மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல் பிஹார் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் லோக்சபாவும் ஒத்தி வைக்கப்பட்டது.

News August 5, 2025

அத்வானியை பின்னுக்கு தள்ளிய அமித்ஷா

image

மத்திய உள்துறை அமைச்சராக அதிக நாள்கள் இருந்தவர் என்ற பெருமையை அமித்ஷா பெற்றுள்ளார். 2,256 நாள்கள் உள்துறை அமைச்சராக இருந்த அத்வானியை, அமித்ஷா(2,258) பின்னுக்கு தள்ளி முதலிடத்துக்கு வந்துள்ளார். அமித்ஷா உள்துறை அமைச்சராக இருந்த போதே ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. பாஜகவின் தேசிய தலைவர், குஜராத்தின் உள்துறை அமைச்சர் போன்ற முக்கிய பதவிகளையும் அமித்ஷா வகித்துள்ளார்.

News August 5, 2025

பகல் 12 மணி வரை இன்று.. முக்கிய செய்திகள்

image

✪ஓரணியில் <<17307685>>தமிழ்நாடு<<>>.. அழைப்பு விடுத்த திமுக
✪ஆபரேஷன் <<17308378>>சிந்தூர்<<>>.. கூட்டணி கட்சியினர் PM மோடிக்கு பாராட்டு
✪ராமதாஸ் <<17307251>>செல்போன் <<>>ஹேக்… அன்புமணி மீது புகார்
✪வங்கி <<17308439>>கடன்<<>>.. 3 மகள்களுடன் தந்தை தற்கொலை ✪தங்கம் <<17307559>>விலை<<>> ₹600 உயர்வு.. சவரன் ₹74,960-ஐ எட்டியது ✪சமனில் முடிந்த <<17307467>>தொடர்<<>>.. பெருமிதத்தில் கம்பீர் ✪<<17306101>>தலைமறைவாக <<>>இருந்த நடிகை மீரா மிதுன் கைது

error: Content is protected !!