News January 15, 2026

அரசியல் தலைவர்களின் பொங்கல் வாழ்த்துகள் (PHOTOS)

image

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், உழைப்புக்கும் இயற்கைக்கும் நன்றி கூறும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவற்றை தெரிந்துகொள்ள மேலே உள்ள புகைப்படங்களை வலதுபுறம் SWIPE செய்யுங்கள். உங்கள் பொங்கல் வாழ்த்தை கமெண்ட்டில் பதிவிடுங்கள்.

Similar News

News February 1, 2026

பட்ஜெட்டில் கவனத்தை ஈர்த்த அறிவிப்பு

image

விவசாயத்துக்கு உதவும் வகையில் ‘Bharat vistar’ எனும் AI-ஐ பட்ஜெட் தாக்கலின்போது நிர்மலா சீதாராமன் அறிமுகப்படுத்தியுள்ளார். எந்த காலத்தில் எதை பயிர் செய்யலாம், எப்படி சந்தைப்படுத்தலாம், பயிர் சேதத்தை எப்படி தடுப்பது என பல விஷயங்களை இந்த AI சொல்லிவிடும் என தெரிவித்துள்ளார். மத்திய அரசின் முக்கிய விவசாய தரவு அமைப்புகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டு செயல்படும் இந்த AI மூலம் விவசாயிகள் அதிக லாபத்தை ஈட்டலாம்.

News February 1, 2026

செல்போன் ரீசார்ஜ் குறைந்தது.. அதிரடி ஆஃபர்

image

BSNL தனது வாடிக்கையாளர்களுக்கு மலிவான விலையில் பல ரீசார்ஜ் பிளான்களை வழங்கி வருகிறது. ₹215 பிளானில் 30 நாள்களுக்கு தினமும் 2 GB டேட்டா சேவை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், அன்லிமிட்டெட் கால்ஸ், தினமும் 100 SMS உள்ளிட்ட அம்சங்களும் இதில் அடங்கும். இதேபோல், ₹228, ₹239, ₹269 என மலிவு விலையில் பல பிளான்கள் BSNL-ல் உள்ளன. இதே சேவையை பிற நெட்வொர்க்குகளில் பெற ₹450 வரை செலவிட வேண்டி இருக்கும்.

News February 1, 2026

இது மலேசியா தைப்பூசம்! PHOTOS

image

மலேசியாவில் உள்ள உலகப் புகழ்பெற்ற பத்து மலை முருகன் கோயிலில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தைப்பூசத் திருநாளை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கூடி முருகனை தரிசனம் செய்தனர். தமிழ்நாட்டை போலவே மலேசியாவிலும் ஒவ்வொரு வருடமும் தைப்பூசம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதன் போட்டோஸை மேலே பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE

error: Content is protected !!