News January 15, 2026
அவனியாபுரம் ஜல்லிகட்டு முதல் சுற்றில் 11 பேர் காயம்!

அவனியாபுரம் ஜல்லிகட்டு போட்டியில் முதல் சுற்றில் மஞ்சள் பனியன் அணிந்து வீரர்கள் களமிறங்கினர். முதல் சுற்று 8.30 மணிக்கு முடிவடைந்தது. இதில் 5 மாட்டின் உரிமையாளர்கள், 6 மாடுபிடிவீரர்கள் என மொத்தம் 11 பேர் காயமடைந்துள்ளனர். இதில் தேனியை சேர்ந்த அஜய் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
Similar News
News January 31, 2026
மதுரை: ரயில்வேயில் 22195 காலியிடங்கள் அறிவிப்பு! APPLY

மதுரை மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22195 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 18 – 33 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் 3ம் தேதிக்குள்<
News January 31, 2026
மதுரை அருகே கார் மோதி டூவீலரில் சென்ற வாலிபர் பலி

மேலூர் அருகே பெரிய சூரக்குண்டை சேர்ந்தவர் மூர்த்தி மகன் ரமேஷ்(23). இவர் மேலூர் திருப்பத்தூர் ரோட்டில் நேற்று பைக்கில் சென்று கொண்டிருந்த போது, ஒய். கொடிக்குளம் கணேசன் ஓட்டி வந்த கார் இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரமேஷ் பலமாக அடிபட்டார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கீழவளவு போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 31, 2026
மதுரை – பிப்ரவரி 1 அன்று டாஸ்மாக் கடைகள் அடைப்பு

வடலூர் இராமலிங்கர் நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனைக் கடைகள் பிப்1 மூடப்பட்டிருக்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மனமகிழ் மன்றத்துடன் கூடிய மதுபானக் கூடங்கள், தங்கும் விடுதியுடன் கூடிய மதுபானக் கூடங்கள், தமிழ்நாடு சுற்றுலாத்துறை விடுதிகளால் நடத்தப்படும் மதுபானக் கூடங்கள் மற்றும் அயல்நாட்டு மதுபான சில்லரை விற்பனை கடைகளும் மூடப்படும்


