News January 15, 2026

கிருஷ்ணராயபுரத்தில் வசமாக சிக்கிய நபர்!

image

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா மேல தாலியாம்பட்டியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் மாணிக்கம் (52). இவர் அப்பகுதியில் உள்ள வாரச்சந்தையில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்து உள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற லாலாபேட்டை போலீசார் மது விற்ற மாணிக்கம் மீது வழக்கு பதிந்து இன்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 26 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

Similar News

News February 3, 2026

கரூர் மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

கரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும் இரவு நேர ரோந்துப் பணிக்குச் சிறப்பு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சட்ட ஒழுங்கைப் பராமரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசரக் காலங்களில் பொதுமக்கள் தங்கள் பகுதி காவல் அதிகாரிகளை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News February 2, 2026

கரூர்: இனி Whatsapp-ல் ஆதார் அட்டை!

image

கரூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <>இங்கே கிளிக் <<>>செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 2, 2026

கரூர்: உங்கள் போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

▶️ மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, ▶️ அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 5991500, ▶️ ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, ▶️ குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, ▶️ முதியோருக்கான அவசர உதவி -1253, ▶️தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, ▶️ பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!