News January 15, 2026
நாமக்கல்லில் தகாத உறவால் அரங்கேறிய பகீர் சம்பவம்!

நாமக்கல் அருகே பேளுக்குறிச்சியில், சங்கீதா என்ற பெண்ணுடன் தகாத உறவில் இருந்த ஆட்டோ டிரைவர் கதிரவனை, அப்பெண்ணின் 17 வயது மகன் கோடாரியால் சரமாரியாக வெட்டினார். இதைக் கண்டு அதிர்ச்சியில் மயங்கி விழுந்த கதிரவனின் தாய் ஜானகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த கதிரவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, தாக்குதல் நடத்திய சிறுவனை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
Similar News
News January 23, 2026
நாமக்கல்: முட்டை விலை 5 காசுகள் உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 5.00- ஆக விற்பனையாகி வந்தது. இந்த நிலையில், நாமக்கல்லில் இன்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையில் 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை ரூ. 5.05 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாதத் தொடக்கத்திலிருந்து சரிவடைந்து வந்த முட்டை விலை, தற்போது 5 காசுகள் உயர்வடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News January 23, 2026
நாமக்கல் மக்களே Certificate காணவில்லையா?

நாமக்கல் மக்களே! சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் நமக்கு அரசின் திட்டங்களை பெற கட்டாயமாக தேவைப்படும் ஆவணங்கள். இது தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே உங்கள் போனில் டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். இந்த <
News January 23, 2026
நாமக்கல்லில் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மாணாக்கர்களின் நலன் கருதி கனமழையின் காரணமாக கடந்த 22.10.2025 அன்று விடுமுறை அளிக்கப்பட்டது. விடுமுறை அளிக்கப்பட்ட நாளினை ஈடுசெய்யும் வகையில் நாளை 24.01.2026 (சனிக்கிழமை) அன்று அனைத்து வகை பள்ளிகளும் செயல்பட வேண்டுமென மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆணையிட்டுள்ளார்.


