News January 15, 2026

தொழில் தொடங்க வாய்ப்பு: நாகை கலெக்டர் அறிவிப்பு

image

தமிழக அரசின் நிறுவனமான தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்துடன் (TANFINET) இணைந்து நாகை மாவட்ட கிராமப்புறங்களில் உயர்தர இணைய சேவைகளை வழங்கும் நோக்கில் மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதில் விருப்பமுள்ள தொழில் முனைவோர்கள் https://tanfinet.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 24, 2026

நாகையில் விளையாட்டுப் போட்டி – ஆட்சியர் அறிவிப்பு

image

நாகை மாவட்டத்தில் ஒன்றிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஜனவரி 25-ம் தேதி தொடங்குகிறது என மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார். நாகை, திட்டச்சேரி, கீழ்வேளூர், வேதாரண்யம், தலைஞாயிறு, கீழையூர் ஆகிய ஒன்றியங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஜனவரி 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தடகளம், வாலிபால், கபடி, கேரம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளன.

News January 24, 2026

நாகை: உங்க பணத்தை பாதுகாக்க இத பண்ணுங்க!

image

நாகை மக்களே.. உங்கள் Gpay, phonepe, paytm போன்றவற்றில் தானாக பணம் போகிறதா? அதனை தடுக்க அருமையான வழி. அதற்கு<> upihelp.npci.org.in என்ற <<>>இணைய தளம் சென்று மொபைல் எண்னை உள்ளிடவும். பின் Show my AUTOPAY Mandates என்பதை கிளிக் செய்து Mandates நிலையைச் சரிபார்த்து, ரத்து செய்யக் கோரலாம். இதன் மூலம் தானியங்கி பணப்பரிமாற்றத்தைத் தவிர்க்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News January 24, 2026

நாகை: சிறுவன் எடுத்த விபரீத முடிவு

image

வேதாரண்யம் அடுத்த வாய்மேடு போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் பள்ளிக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்து தூக்கிட்டு கொண்டார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

error: Content is protected !!