News January 15, 2026

மயிலாடுதுறை: வாகன ஏலம் அறிவிப்பு – போலீஸ்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 46 டூவீலர்கள், 11 நான்கு சக்கர வாகனங்கள் உட்பட 58 வாகனங்கள் வரும் ஜன.21-ம் தேதி மயிலாடுதுறை டிஎஸ்பி முகாம் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர் 21.01.2026 அன்று காலை 6 மணி முதல் 9 மணிக்குள் தங்களது பெயர்களை பதிவு செய்து டோக்கன் பெற்றுக்கொள்ள வேண்டும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 26, 2026

மயிலாடுதுறை: நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

image

மயிலாடுதுறை மாவட்டம் சாய் விளையாட்டு அரங்கத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 77வது குடியரசு தின விழா மாவட்ட ஆட்சியர் ஹெச். எஸ். ஸ்ரீகாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளின் சார்பில் 310 பயனாளிகளுக்கு ₹95 லட்சத்து 12 ஆயிரத்து 629 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

News January 26, 2026

மயிலாடுதுறை: பிறப்பு-இறப்பு சான்று வேண்டுமா? Hi சொல்லுங்க

image

மயிலாடுதுறை மாவட்ட மக்கள் இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.

News January 26, 2026

மயிலாடுதுறை: மாதம் ரூ.6,000 வேண்டுமா ?

image

மத்திய அரசின் DDU-GKY திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பற்ற கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் 15 முதல் 35 வயதுடைய ஆண்களும், 40 வயதுக்குட்பட்ட பெண்களும் விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கும் 2 முதல் 6 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.6,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இதில் பதிவு செய்ய இங்கே<> க்ளிக் <<>>செய்யுங்க. SHARE IT

error: Content is protected !!