News January 15, 2026
கள்ளக்குறிச்சியில் பகீர் – இளம்பெண் கடத்தல்!

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். நேற்று வீட்டில் தனியாக இருந்த அவரை திடீரென காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடியள்ளனர். அப்போது, புதுப்பாலப்பட்டை சேர்ந்த மணிவேல் (30) அந்த பெண்ணை கடத்திச் சென்றது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவர்கள் அளித்த புகாரின் பேரில், மணிவேல் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 26, 2026
கள்ளக்குறிச்சியில் 250 நாட்டுக் கோழிகள் இலவசம்!

கள்ளக்குறிச்சி மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
News January 26, 2026
சிறப்பாக பணியாற்றிய எஸ்ஐ-க்கு பாராட்ட சான்றிதழ்

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றிய லோகேஸ்வரன், சிறப்பாக பணியாற்றியதாக, இன்று நடைபெற்ற 77-வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் மற்றும் காவலர்கள் உடன் இருந்தனர்.
News January 26, 2026
மதுவிலக்கு போலீசாருக்கு பரிசு வழங்க ஆட்சியர்

உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் தனசேகரன் சிறப்பாக பணியாற்றியதற்காக 77 ஆவது குடியரசு தின விழாவில் ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். அருகில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் உடன் இருந்தார். இந்த விழாவில் காவலர்கள் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


