News January 15, 2026
தமிழர் இல்லங்களில் பொங்கட்டும் இன்ப பொங்கல்

பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழக மக்களுக்கு CM ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். புதுப்பானையில் புத்தரிசிப் பொங்கலெனப் பொங்கிட, இனித்திடும் செங்கரும்பைச் சுவைத்து, செங்கதிரோனைப் போற்றிடும் தமிழர் திருநாளில், தமிழர் வாழ்வு செழித்திட வாழ்த்துகிறேன். தமிழர் உள்ளங்களிலும் இல்லங்களிலும் பொங்கிடும் இந்த மகிழ்ச்சிப் பொங்கல், பன்மடங்காக பெருகும் எனவும் வாழ்த்து கூறி, வெல்வோம் ஒன்றாக! குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News January 25, 2026
திமுகவில் OPS இணைகிறாரா? அமைச்சர் ரகுபதி பதில்

OPS-யிடம் சேகர்பாபு நடத்திய பேச்சுவார்த்தை குறித்த கேள்விக்கு, அமைச்சர் ரகுபதி யார் வந்தாலும் வரவேற்கும் இயக்கம்தான் திமுக என விளக்கம் அளித்துள்ளார். தங்களை நம்பி வருபவர்கள் மோசம்போவதில்லை எனவும், மற்றவர்களை நம்பி செல்பவர்கள் மோசம் போவது உறுதி என்றும் கூறியுள்ளார். திமுக கூட்டணிக்கு பாமக (ராமதாஸ்) வருமா என்ற கேள்விக்கு, தலைமைதான் முடிவு செய்யும் எனவும் தெரிவித்துள்ளார்.
News January 25, 2026
TOSS: இந்திய அணி பவுலிங்

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங்கிற்கு பதில், பும்ரா மற்றும் ரவி பிஷ்னோய் அணியில் இணைந்துள்ளனர். 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஏற்கெனவே இந்தியா 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. கடந்த 2 போட்டிகளிலும் அதிரடி பேட்டிங் மூலம் மிரட்டிய இந்தியா, இன்றும் ஆதிக்கம் செலுத்தி தொடரை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News January 25, 2026
தங்கம் வைத்திருப்போருக்கு எச்சரிக்கை

2026-ல் புதிய விதிகளின்படி, நகைகளை தாமதமாக விற்றால் உங்களின் வரிச்சுமை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதாவது, வாங்கிய தங்கத்தை 2 ஆண்டுகளுக்கு பின் விற்பனை செய்தால், அது நீண்ட கால மூலதன ஆதாயமாக கருதப்பட்டு 12.5% வரி விதிக்கப்படும். முன்பிருந்த இண்டெக்சேஷன் பலன் இப்போது கிடையாது. அதேநேரத்தில், 2 ஆண்டுகளுக்குள் தங்கத்தை விற்றால் குறுகிய கால முதலீடாக கருதி, வருமான வரி வரம்புப்படி வரி வசூலிக்கப்படும்.


