News January 15, 2026
பொங்கலை கேளிக்கையாக்கும் திமுக: வானதி

பொங்கல் பண்டிகையை மதம் பேதம் இல்லாமல் அனைவரும் கொண்டாட வேண்டும் என CM ஸ்டாலின் கூறியதை வானதி விமர்சித்திருக்கிறார். இந்து மத அழிப்பை திமுக அடிப்படையாக கொண்டிருப்பதாக கூறிய அவர், இந்துக்களின் பண்டிகையான பொங்கலை New Year போல, வெறும் கேளிக்கையாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது எனவும் கூறியுள்ளார். மேலும், பொங்கல் பண்டிகையின் ஆன்மிகத்தை அதிலிருந்து அகற்ற துடிக்கின்றனர் எனவும் பேசியுள்ளார்.
Similar News
News February 1, 2026
பாட்ஷாவுடன் கைகோர்க்கும் பாலிவுட் பாட்ஷா..!

‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் பாலிவுட் கிங் ஷாருக்கான் ரஜினியின் நண்பராக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ரஜினி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘ஜெயிலர்’ முதல் பாகத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்த நிலையில், 2-ம் பாகத்தில் மேலும் பல பிரபலங்கள் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
News February 1, 2026
இந்த பொருளால் குழந்தையின் உயிருக்கு பேராபத்து!

வீட்டில் பூச்சித் தொல்லை இருக்கா? இதற்காக கட்டிலுக்கு அடியில், பீரோவில் என ஆங்காங்கே நாப்தலின் பால்களை வைக்கிறீர்களா? இதில் அதீத நச்சுத்தன்மை இருப்பதால் குழந்தைகள் இருக்கும் வீட்டில் தயவுசெய்து இனி அவற்றை பயன்படுத்த வேண்டாம். இதை குழந்தைகள் கையில் தொட்டாலோ அல்லது தப்பித்தவறி வாயில் போட்டாலோ, அது அவர்களின் உயிருக்கே பேராபத்தாக முடிந்துவிடும். அனைத்து பெற்றோருக்கும் SHARE THIS.
News February 1, 2026
தேர்தலுக்காக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது என்ன?

தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு & கேரளாவுக்கு 7 புதிய அதிவேக ரயில் வழித்தடங்கள், அரிய வகை கனிம வழித்தடங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. WB, அசாமுக்கு புதிதாக 5 சுற்றுலாத் தலங்கள், 4,000 மின்சார பஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், நவீன உள்கட்டமைப்பு, அடிப்படை வசதிகள் தேவைப்படும் 2&3-ம் நிலை நகரங்கள் மீது பட்ஜெட் கவனம் செலுத்துவதால், தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களும் பயனடையும் என FM கூறியுள்ளார்.


