News January 15, 2026
ஜனவரி 15: வரலாற்றில் இன்று

*இந்திய ராணுவ தினம். *1868 – நீதிக்கட்சி நிறுவனர்களில் ஒருவரான டி.எம்.நாயர் பிறந்தார். *1929 – அமெரிக்க புரட்சியாளர் மார்ட்டின் லூதர் கிங் பிறந்தார். *1966 – நடிகை பானுப்ரியா பிறந்தார். *1981 – தமிழறிஞர் தேவநேயப் பாவாணர் காலமானார். *1986 – நடிகர் விக்ரம் பிரபு பிறந்தார். *2001 – விக்கிப்பீடியா தொடங்கப்பட்டது. *2018 – எழுத்தாளர் ஞாநி சங்கரன் மறைந்தார்.
Similar News
News January 31, 2026
நகைக் கடன்.. மக்களுக்கு அதிர்ச்சி

தங்கம் விலை பெரியளவில் மாற்றத்தை சந்தித்து வரும் சூழலில், TN-ல் பல மாவட்டங்களில் கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், கிராமப்புறங்களில் அத்தியாவசிய தேவைகளுக்காகக் கூட நகைக் கடன் பெற முடியாமல் மக்கள் தவிப்பதாக கூறப்படுகிறது. போதிய நிதியில்லை என்பதால் நகைக் கடன் வழங்க மறுப்பதாக புகார் எழுந்துள்ளது. உங்க பகுதியிலும் பிரச்னை உள்ளதா?
News January 31, 2026
நிதிக்காக பாகிஸ்தான் பிச்சை எடுப்பது அவமானம்: பாக்., PM

நாட்டின் பொருளாதார நெருக்கடி குறித்து பாகிஸ்தான் PM ஷெபாஸ் ஷெரீப் வெளிப்படையாக பேசியுள்ளார். பாகிஸ்தானின் பொருளாதாரத்தைச் சமாளிக்க உலக நாடுகளிடம் நிதியுதவி கேட்பது தமக்கும், ராணுவத் தளபதிக்கும் மிகுந்த மனவேதனையையும் அவமானத்தையும் அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். கடன் வாங்குவது நாட்டின் சுயமரியாதையை பாதிப்பதாகவும், வெளிநாடுகளிடம் கையேந்தும்போது தலைகுனிய வேண்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
News January 31, 2026
திமுக MLA பழனியாண்டியை கைது செய்க: சீமான்

கரூர் அருகே கனிமவள கொள்ளை குறித்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர் தாக்கப்பட்டதுக்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் ஊடகவியலாளருக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதாகவும், ஆட்களை வைத்து செய்தியாளர் மீது தாக்குதல் நடத்திய திமுக MLA பழனியாண்டியை கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். DMK ஆட்சியில் போதை, கனிமவளகொள்ளையில்தான் TN முதன்மை மாநிலமாக உள்ளதாகவும் சாடியுள்ளார்.


