News January 15, 2026

4 கணவர்களை வச்சிக்கலாம் என தேர்தல் வாக்குறுதி!

image

தாய்லாந்து PM வேட்பாளர் மோங்கோல்கிட் சுக்சிந்தரனோன், ஒரு விநோதமான தேர்தல் வாக்குறுதியை கொடுத்துள்ளார். அதன்படி, தனது ஆட்சியில் தாய்லாந்து பெண்கள் 4 கணவர்கள் வரை கொண்டிருக்கலாம் எனவும், முக்கியமாக, அது 4 பேரின் பரஸ்பர சம்மதத்துடன் இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவித்துள்ளார். பாலின சமத்துவத்தை பேணவே இத்தகைய வாக்குறுதியை அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?

Similar News

News February 4, 2026

CM ஸ்டாலினுக்கு இபிஎஸ் கொடுத்த அதிர்ச்சி

image

கல்விக்கடன் ரத்து, இலவச சிலிண்டர் உள்ளிட்ட <<19047729>>அறிவிப்புகளை <<>>வெளியிட்டு ஸ்டாலினுக்கு EPS அதிர்ச்சி கொடுத்துள்ளார். 2021-ல் கல்விக்கடன் ரத்து, சிலிண்டருக்கு ₹100 மானியம் போன்ற வாக்குறுதிகளை DMK நிறைவேற்றவில்லை. அதிமுகவை தொடர்ந்து, திமுகவும் தனது தேர்தல் அறிக்கையில் கல்விக்கடன் ரத்து, இலவச சிலிண்டர் என அறிவித்தால், ஏன் ஏற்கெனவே கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்ற கேள்வி எதிரொலிக்க வாய்ப்புள்ளது.

News February 4, 2026

CM மம்தாவின் Voter Id-யிலேயே ECI தவறு செய்துள்ளதா?

image

SIR பணிகளில் குளறுபடிகள் நடந்துள்ளதற்கு தானே சாட்சி என மம்தா பானர்ஜி SC-ல் தெரிவித்துள்ளார். என்னுடைய அடையாள அட்டையில் இருக்கும் புகைப்படம் என்னுடையதே இல்லை என்ற அவர், அதை ஒரு செய்தித்தாளிலிருந்து எடுத்து ECI பயன்படுத்தியிருப்பதாக கூறியுள்ளார். இதனால்தான் SIR-ஐ பயன்படுத்தி வாக்காளர்களை நீக்கும் பணிகளை மட்டுமே ECI செய்கிறது என்று உறுதியாக சொல்கிறேன் என வாதாடியுள்ளார்.

News February 4, 2026

28 விரல்களை கொண்ட அதிசய மனிதன்!

image

குஜராத்தின் தேவேந்திர சுதர் என்பவர், உலகிலேயே அதிக விரல்களைக் கொண்டவர் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். ஒரு கையில் 7 விரல்கள், ஒரு காலில் 7 விரல்கள் என அவருக்கு மொத்தமாக 28 விரல்கள் உள்ளன. தச்சுத் தொழிலாளியான இவர், எக்ஸ்ட்ரா விரல்கள் பிரச்னையாக இருந்ததில்லை என கூறுகிறார். கால் விரல்களுக்காக அவர் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட காலணிகளையே அணிகிறார்.

error: Content is protected !!