News January 15, 2026
‘ஜெயிலர் 2’-ல் ரஜினிக்கு வில்லன் விஜய் சேதுபதியா?

இனி தன்னை ஆச்சரியப்படுத்தும் கதைகளில் மட்டும் தான் வில்லனாக நடிப்பேன் என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். வழக்கமான வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்க சொல்லி பலர் தன்னை அணுகுவதாகவும், ஆனால், ஒரு வில்லனை ஹீரோவாக புரொமோட் செய்வதில் தனக்கு விருப்பமில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், ரஜினியை பிடிக்கும் என்பதால் ‘ஜெய்லர் 2’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 27, 2026
BREAKING: கர்நாடக முதல்வர் கைது

கர்நாடக CM சித்தராமையா, DCM சிவக்குமார், காங்., பொதுச்செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ‘MGNREGA’ திட்டத்திற்கு ‘VB-G RAM G’ என பெயர் மாற்றம் செய்த மத்திய அரசுக்கு எதிராக ‘லோக் பவன் சலோ’ என்ற பெயரில் இன்று பேரணி நடத்த சித்தராமையா திட்டமிட்டிருந்தார். இதனை தொடர்ந்து தடுப்பு நடவடிக்கையாக கோர்ட் உத்தரவின்பேரில்(COURT ARREST) CM, DCM உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
News January 27, 2026
தமிழக தேர்தல்.. வெளியான முக்கிய தகவல்

சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை நடத்த பிப்ரவரி முதல் வாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) ஞானேஷ் குமார் தலைமையிலான குழு தமிழகம் வரவுள்ளது. 2 நாள் சென்னையில் தங்கவிருக்கும் இக்குழுவினர், முதல் நாளில் அங்கீகாரம் பெற்ற கட்சிகளுடனும், 2-வது நாளில் பிற அரசியல் கட்சிகளுடன் தேர்தல் தொடர்பாக ஆலோசிக்க இருக்கின்றனர். இதன்பின் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
News January 27, 2026
வங்கதேசத்திற்கு மீண்டும் ஷாக் கொடுத்த ICC

இந்தியாவில் நடைபெறவுள்ள T20 உலகக்கோப்பையில் இருந்து வங்கதேசத்தை <<18952171>>ICC நீக்கியது<<>>. இந்நிலையில், அந்நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர்களுக்கு ஊடக அங்கீகாரத்தை (T20WC) வழங்கவும் ICC மறுத்துள்ளது. இந்தியாவுக்கு செல்ல விசாவுக்காக 150 பத்திரிகையாளர்கள் வரை விண்ணப்பித்திருந்த நிலையில், யாருக்கும் அனுமதி கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ICC முற்றிலுமாக வங்கதேசத்தை புறக்கணித்ததாக பார்க்கப்படுகிறது.


