News January 15, 2026
ஆசிரியரின் உயிரை பறித்த திமுக அரசு: EPS

திமுக கொடுத்த பொய் வாக்குறுதி காரணமாகவே, <<18857511>>பகுதிநேர ஆசிரியர் கண்ணன்<<>> தற்கொலை செய்துகொண்டதாக EPS குற்றஞ்சாட்டியுள்ளார். தனது X பதிவில் அவர், ஆசிரியர் மரணித்த கவலை கொஞ்சமும் இன்றி கவிதை பாடச் சொல்லி Vibe செய்யும் ஸ்டாலின், முதல்வர் என்ற உயரிய பதவிக்கு ஒரு இழுக்கு என விமர்சித்துள்ளார். மேலும், கண்ணனின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடாக திமுக அரசு ₹50 லட்சம் வழங்க வேண்டும் என EPS வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News April 8, 2026
இரவு மின்சார ரயில்கள் ரத்து மேலும் நீட்டிப்பு

எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடை 10, 11-ல் மேற்கூரை அமைத்தல் உள்ளிட்ட மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் இரவு மின்சார ரயில்கள் ரத்து மேலும் நீட்டிக்கப்படுகிறது. அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து வருகிற 12-ந் தேதி அதிகாலை மற்றும் இரவில் தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் மற்றும் தாம்பரத்தில் இருந்து இரவு 10.20, 11, 11.40 மணிக்கு கடற்கரை வரும் ரயில்கள் உள்ளிட்டவை ரத்து செய்யப்படுகிறது.
News April 8, 2026
தமிழகத்தில் பெண்களுக்கு உரிய நியாயம்: கனிமொழி

கடந்த அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நடந்தபோது, குற்றவாளிகளை பாதுகாப்பதிலேயே EPS ஆர்வம் காட்டியதாக கனிமொழி விமர்சித்துள்ளார். திருவள்ளூர் பரப்புரையில் பேசிய அவர், தேசிய அளவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் சராசரி 65% ஆக உள்ள நிலையில், TN-ல் அது வெறும் 23% ஆக மட்டுமே உள்ளது என்றார். தமிழகத்தில் 91% வழக்குகள் பதியப்பட்டு பெண்களுக்கு உரிய நியாயம் கிடைப்பதாகவும் குறிப்பிட்டார்.
News April 8, 2026
எடப்பாடி TVK வேட்புமனு தள்ளுபடி.. KAS கடும் அதிர்ச்சி!

எடப்பாடியில் EPS-க்கு எதிராக செங்கோட்டையன் நிறுத்திய அருண்குமாரின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் அவர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். காரணம், EPS-ஐ அரசியல் எதிரி, துரோகி என கடுமையாக விமர்சனம் செய்து வரும் அவர், எடப்பாடி தொகுதியில் EPS நிச்சயம் தோல்வியடைவார் என சவால் விட்டிருந்தார். தற்போது அந்த தொகுதியில் தவெக வேட்பாளரே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதால் அக்கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர்.


