News January 14, 2026
டெல்லியில் விளையாட மாட்டேன்: உலக சாம்பியன்

டெல்லியில் நடக்கும் இந்திய பேட்மிண்டன் ஓபனில் இருந்து உலகின் 3-ம் நிலை வீரர் ஆண்டர்ஸ் ஆண்டன்ஸன் விலகியுள்ளார். காற்றுமாசு பிரச்னையால் இந்த முடிவை எடுத்ததாகவும், தற்சமயத்தில் டெல்லியில் போட்டிகளை நடத்துவது சரியாக இருக்காது என்றும், அவர் தனது SM-ல் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து 3-வது முறையாக இதே காரணத்தை சொல்லி தொடரில் இருந்து விலகியதால் அவருக்கு ₹4.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 21, 2026
திருப்பூர்: கரண்ட் பில் அதிகமா வருதா? இத பண்ணுங்க!

திருப்பூர் மக்களே கரண்ட் பில் அதிகமா வருதா? கவலையை விடுங்க இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம். அல்லது 94987-94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்!
News January 21, 2026
மீண்டும் NDA கூட்டணியில் இணைந்தார் TTV

தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதற்காக NDA கூட்டணியில் இணைந்துள்ளதாக TTV தினகரன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும், அமமுகவிற்கு மட்டும் அல்ல, TN-க்கே இது நற்செய்தி என்றும், மக்கள் விரும்பும் நல்லாட்சியை உருவாக்கவே இந்த கூட்டணி எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் அதிமுகவுடன் இருப்பது பங்காளி சண்டை மட்டுமே என்றவர், விட்டுக்கொடுப்பவர் கெட்டுபோவதில்லை எனவும் பஞ்ச் பேசியுள்ளார்.
News January 21, 2026
WhatsApp-ல் ‘Storage Full’ பிரச்னையா?

WhatsApp-ல் தானாகவே பல தரவுகள் டவுன்லோடாகி, ‘Storage Full’ பிரச்னையை பலரும் சந்திக்கிறோம். இது எரிச்சலான விஷயமாகும். இந்த பிரச்னையில் இருந்து தப்பிக்க சில எளிய வழிமுறைகள் உள்ளன. WhatsApp-ல் வலது மூலையில் இருக்கும் 3 புள்ளிகளை கிளிக் செய்து அதில், ‘Settings’-ஐ தேர்வு செய்யவும். அதில், ‘Chats’-ஐ கிளிக் செய்து, Media Visibility-ஐ Off செய்யவும். இது போனின் Storage பயன்பாட்டை மேம்படுத்த உதவும்.


