News January 14, 2026

₹1,000 உரிமைத் தொகை உயர்வு.. மகிழ்ச்சியான செய்தி

image

₹1,000 மகளிர் உரிமைத் தொகை உயர்த்தி வழங்கப்படும் என CM ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்திருந்தார். இதுதொடர்பாக அமைச்சரும் விரைவில் இனிப்பான செய்தி வரும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகையை 50% உயர்த்தி ₹1,500 ஆக வழங்கப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அறிவிப்பையும் CM ஸ்டாலின் பொங்கல் தினமான நாளை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.

Similar News

News February 13, 2026

திமுககாரர் வீட்டில் ஓட்டு கேட்காதீங்க

image

அதிமுக வேட்பாளராக யார் நின்றாலும் இரட்டை இலை சின்னத்தில் வாக்கு செலுத்தி வெற்றிபெற வைக்க வேண்டும் என சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். அதிமுகவினர் தெரு தெருவாக சென்று வாக்கு சேகரிக்க வேண்டும். அதற்காக திமுககாரர் வீட்டில் போய் ஓட்டு கேட்கக்கூடாது; அவர்கள் நமக்கு ஓட்டுப்போட மாட்டார்கள் என்றார். ஒவ்வொரு வாக்கு சாவடியில் உள்ளவர்களும் தரவுகளை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

News February 13, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: மடியின்மை ▶குறள் எண்: 607▶குறள்: மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும். ▶பொருள்: பெருமைமிக்க குடியில் பிறந்தவராயினும், அவரிடம் சோம்பல் குடியேறி விட்டால் அதுவே அவரைப் பகைவர்களுக்கு அடிமையாக்கிவிடும்.

News February 13, 2026

இஸ்லாமியர்களை புறந்தள்ளும் திராவிட கட்சிகள்

image

திராவிட கட்சிகளுக்கு தங்களின் ஆதரவை வழங்கி வரும் முஸ்லீம் கட்சிகளுக்கு சட்டமன்றத்தில் உரிய பிரதிநித்துவம் வழங்கப்படவில்லை என தமிழ் மாநில காங்., கட்சியின் பொதுச் செயலாளர் முனாவர் பாஷா குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாக, பிரதான இஸ்லாமிய கட்சிகள் ஒரு சீட்டுக்கும், இரண்டு சீட்டுக்கும் திராவிட கட்சிகளிடம் நிற்காமல், ஒரு குடையின் கீழ் இணைந்தால் முஸ்லீம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும் என்றார்.

error: Content is protected !!