News January 14, 2026
Good Bye.. விலகப் போகிறது வடகிழக்கு பருவமழை

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வெளுத்து வாங்கியது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் கூட தென் & டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்நிலையில், பொங்கல் விழாக் காலமான 3 நாளில் மழை முடிவடையவுள்ளதாக IMD கணித்துள்ளது. அத்துடன், வடகிழக்கு பருவமழை முடிவடைந்துவிட்டதால், அடுத்த சில நாள்களுக்கு பனி பொழியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மழைக்கு Good Bye..
Similar News
News February 8, 2026
தொகுதியிலும் ‘V’-ஐ தேடும் விஜய்

கட்சி ஆரம்பித்ததில் இருந்தே ‘V’ செண்டிமெண்ட்டை விஜய் விடுவதாக தெரியவில்லை. கட்சி பெயர் முதல் மாநாடு நடத்தும் இடம் வரை ‘V’ வருவது போன்று பார்த்துக்கொள்கிறார். தேர்தலிலும் ‘V’ எழுத்தில் தொடங்கும் தொகுதியில் விஜய் களமிறங்குவதாக கூறப்படுகிறது. சென்னையில் விருகம்பாக்கம், வேளச்சேரி, விக்கிரவாண்டி, வேதாரண்யம் மற்றும் மத்திய மாவட்டங்களில் ‘V’ எழுத்தில் தொடங்கும் தொகுதியை சல்லடை போட்டு அலசுகிறார்களாம்.
News February 8, 2026
இன்றைய நல்ல நேரம்

▶பிப்ரவரி 8, தை 25 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 3:30 PM – 4:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 1:30 AM – 2:30 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 PM – 4:30 PM ▶திதி: சப்தமி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்.
News February 8, 2026
தவெகவை வம்புக்கு இழுத்த உதயநிதி

விருதுநகரில் நடைபெற்ற இளைஞரணி மாநாட்டில் தவெகவை மறைமுகமாக உதயநிதி ஸ்டாலின் அட்டாக் செய்து பேசினார். கொள்கை, லட்சியம் என்றால் என்னவென்று தெரியாமல் கட்டுப்பாடின்றி வெற்றுக் கூச்சல் போடும் ஒரு கூட்டம் தமிழ்நாட்டில் சுற்றுகிறது என்று சாடிய அவர், அவர்களால் தமிழ்நாட்டிற்கு எந்தவித பயனும் இல்லை; இன்னும் சொல்லப்போனால் அவர்களால் அவர்களுக்கே எந்த பயனும் கிடையாது என்று தெரிவித்தார்.


