News January 14, 2026

தி.மலை: தை முதல் செல்ல வேண்டிய முக்கிய கோயில்கள்!

image

தி.மலை மக்களே தை பிறந்தாள் வழிபிறக்கும் என்பதால் புதிய மாற்றத்திற்காக காத்திருப்பவர்கள் இந்த நன்னாளில்
*அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில்
*படவேடு ரேணுகாம்பாள் திருக்கோயில்
*இடுக்கு விநாயகர் கோயில்
*பச்சை அம்மன் கோயில்
மேலே உள்ள தலங்களுக்கு சென்று வழிப்படுவதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் புதிய மாற்றம் வரும். இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

Similar News

News February 12, 2026

ஆரணி அருகே அலறியடித்து ஓடிய மக்கள்!

image

தி.மலை: ஆரணி அடுத்த ராட்டினமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சாலையோரம் உள்ள புளியமரத்தின் கீழ் குப்பைகளை கொட்டி, எரித்து வந்தனர். இந்நிலையில், நேற்று(பிப்.11) மரத்தடியில் வைக்கப்பட்ட தீ, காற்றின் வேகத்தில் மரத்தைப் பற்றியது. இதையடுத்து மரம் கொளுந்து விட்டு எரிந்து விழுந்தது. இதைக் கண்ட அருகே இருந்த மக்கள் அலறி அடித்து ஓடினர். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர்.

News February 12, 2026

தி.மலை: நடுரோட்டில் அட்டகாசம்; பிறந்தநாள் ரணகளமானது!

image

வந்தவாசியில் தவெக மாவட்ட செயலாளர் பிறந்தநாள் விழாவில் விதிகளை மீறிய 50 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தவெக மாவட்ட செயலாளர் உதயகுமார் பிறந்தநாள் விழாவில் சாலையில் பட்டாசு வெடித்து கிரேன் மூலம் மாலை அணிவித்து அட்டகாசத்தில் ஈடுபட்டதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News February 12, 2026

தி.மலை கலெக்டர் கறார்!

image

தி.மலை மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மூலம் 110 இடங்களில் விவசாயிகளின் நலன் கருதி நெல் கொள்முதல் நிலையங்கள் படிப்படியாக திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விவசாயிகள் அல்லாத நபர்கள் வியாபாரிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தி.மலை கலெக்டர் கறாராக தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!