News May 5, 2024
நாமக்கல்லில் சுட்டரிக்கும் வெயில்

தமிழ்நாட்டில் கோடை வெயிலின் உச்சமான அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நேற்று தொடங்கியது. கத்திரி வெயில் வரும் 28ஆம் தேதி வரை நீடிக்கும் நிலையில், வரும் நாட்களிலும் வெயில் வாட்டி வதைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் 40.5 செல்சியஸ் பதிவாகியுள்ளது.
Similar News
News October 29, 2025
நாமக்கல் விவசாயிகளுக்கு ஆட்சியர் வேண்டுகோள்!

நாமக்கல்லில் சிறப்பு பருவ பயிர்களான நெல்-II (ம) சிறிய வெங்காயம்-II சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ, கூட்டுறவு கடன் சங்கங்களிலோ, பொது சேவை மையங்களிலோ பிரீமியத் தொகையாக, நெற்பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.567.61-ம், சிறிய வெங்காயத்திற்கு ரூ.2087.16-ஐ செலுத்தி காப்பீடு செய்யலாம். காப்பீடு செய்ய கடைசி தேதி: நெற்பயிருக்கு டிச.16 (ம) சிறிய வெங்காயம் பயிருக்கு டிச.01 ஆகும்
News October 29, 2025
நாமக்கல்லில் அக்.31-ல் பேச்சுப்போட்டி!

நாமக்கல் அரசு ஆண்கள் (தெற்கு) மேல்நிலை பள்ளியில் தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி வரும் அக்.31ஆம் தேதி அன்று காலை 09.30 மணி முதல் 1 மணி வரை 6 முதல் 12 ஆம் வகுப்பு அரசு/தனியார் பள்ளி மாணவர்களுக்கும், பிற்பகல் 01.30 மணி முதல் அரசு/தனியார் கல்லூரி மாணவர்களுக்கும் பேச்சுப் போட்டிகள் தனித்தனியே நடத்தப்படவுள்ளன. எனவே போட்டி தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 04286292164 ஐ தொடர்புக் கொள்ளவும்.
News October 29, 2025
நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று அக்டோபர்.28 நாமக்கல்-( தேசிங்கன் – 8668105073) ,வேலூர் -(ரவி – 9498168482 ), ராசிபுரம் -(கோவிந்தசாமி – 9498169110), குமாரபாளையம் -(செல்வராஜு – 9994497140) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.


