News January 14, 2026
வேலூர்: அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் உடனே Call..! (CLICK)

வேலூர் மக்களே.. போலீஸ், தாசில்தார், MLA, கவுன்சிலர் போன்ற அரசு தொடர்புடைய ஊழியர்கள் தங்களது வேலைகளை முறையாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால் கவலை வேண்டாம். உடனே வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (0416-2220893) புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!
Similar News
News January 30, 2026
வேலூர்: துரத்தி துரத்தி கடித்து குதறிய வெறி நாய்!

போ்ணாம்பட்டு அருகே குப்பைமேடு பகுதியில் நேற்று (ஜன.29) முஹம்மத் பஷீா்(14), உம்மேஹனி(5) , ஷாயிரா(4) ஆகிய 3 சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது 3 சிறுவர்களை அப்பகுதியில் சுற்றி திரிந்த வெறி நாய் கடித்து குதறியது. நாய் கடித்ததில் பலத்த காயமடைந்த சிறுவா்களை அப்பகுதி மக்கள் மீட்டு போ்ணாம்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமத்திதனர்.
News January 30, 2026
வேலூர்: சிறுமிக்கு மிரட்டல்; பாய்ந்த போக்சோ!

லத்தேரியை சேர்ந்த தீயணைப்பு வீரர் சசிகுமார் (31). அப்பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் நெருங்கி பழகி வந்த இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இதை அறிந்த சிறுமி, அவருடன் பேசுவதை தவிர்த்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த சசிகுமார், சிறுமியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதாக மிரட்டியுள்ளார். இதையடுத்து காட்பாடி போலீசார் போக்சோ வழக்கில் சசிகுமாரை கைது செய்தனர்.
News January 30, 2026
வேலூர்: காதலி கண் முன்னே பற்றி எரிந்த காதலன்!

ஜாப்ராபேட்டையை சேர்ந்த வாலிபர் (25) அதே பகுதியை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்தார். இந்நிலையில் நேற்று (ஜன.29) இரவு அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற வாலிபர் திடீரென தீக்குளித்தார். தீயின் வெப்பத்தை தாங்க முடியாமல் அவர் அலறியதை கண்ட பொதுமக்கள் உடனடியாக தீயை அணைத்து வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் மருத்துவமனையில் சேர்ந்தனர். இதுகுறித்து லத்தேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


