News May 5, 2024
IPL: சென்னை அணி 167 ரன்கள் குவிப்பு

ஐபிஎல்லில் PBKS அணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 168 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. முக்கிய வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்த போதிலும் ரவீந்திர ஜடேஜா ஒற்றை ஆளாய் 43 ரன்களை விளாசினார். இதனால், 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்களை சென்னை அணி குவித்தது.
Similar News
News September 4, 2025
தொழில் தொடங்கணும், ஆனா பணம் இல்லையா?

உற்பத்தி மற்றும் சேவைத் துறையில், தொழில் தொடங்குபவர்களுக்கு மத்திய அரசின் PMEGP திட்டம் ₹25 லட்சம் வரை கடன் வழங்குகிறது. பெறப்படும் கடனில் வெறும் 65% அடைத்தால் போதும். கடனை அடைக்க 7 ஆண்டுகள் வரை நேரம் கொடுக்கப்படும். 8ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் இந்த திட்டத்திற்கு www.kviconline.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். SHARE.
News September 4, 2025
‘சிட்டிசன்’ படம் கமல் பண்ண வேண்டியதா?

அஜித் திரை வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படம் ‘சிட்டிசன்’. அத்திப்பட்டியையும், அவரின் கெட்டப்புகளையும் அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்கமாட்டார்கள். அஜித்தின் சினிமா கேரியரில் முக்கியமான அந்த படம் முதலில் கமல் பண்ணுவதாக இருந்ததாம். இதனை முன்னர் ஒரு பேட்டியில் அதன் இயக்குநரே சொல்லியிருப்பார். கமலுக்கு கதை படித்திருந்தாலும், ஹேராம் படத்தில் பிஸியாக இருந்ததால் படம் கை நழுவியுள்ளது.
News September 4, 2025
மீண்டும் முதலிடம் பிடித்த சென்னை IIT

17 பிரிவுகளில் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நாட்டில் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலில் சென்னை IIT முதலிடம் பிடித்துள்ளது. சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம் 2-ம் இடமும், பாரதியார் பல்கலைக்கழகம் 10-வது இடமும் பிடித்துள்ளன. சிறந்த கல்லூரிகள் பட்டியலில் கிருஷ்ணம்மாள் கல்லூரி 9-வது, PSG கல்லூரி 10-வது இடத்தையும் பிடித்தன.