News January 14, 2026
சங்கிகுழு பொங்கலில் பராசக்தி குழு: மாணிக்கம் தாகூர்

PM மோடி பங்கேற்ற பொங்கல் விழாவில், <<18853976>>’பராசக்தி’<<>> படக்குழுவும் பங்கேற்றிருந்தது. இதை சுட்டிக்காட்டி, ‘சங்கிகுழு பொங்கலில் பராசக்தி குழு; ஆக ஜனநாயகன் blocked’ என்று மாணிக்கம் தாகூர், பதிவிட்டுள்ளார். முன்னதாக ‘பராசக்தி’ படம் தோல்வி என்றும் அவர் கூறியிருந்தார். சமீபகாலமாகவே ஆட்சியில் பங்கு, விஜய்க்கு ஆதரவு என அவர் பேசுவது சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், மீண்டும் சர்ச்சை கருத்தை பதிவிட்டுள்ளார்.
Similar News
News February 6, 2026
CINEMA 360°: விக்ரமின் ஜோடியாக சுருதிஹாசன்

*விமலின் ‘மகாசேனா’ இன்று முதல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது *சிரஞ்சீவியின் ‘மன சங்கர வர பிரசாத் காரு’ 25 நாள்களில் 375 கோடி வசூலித்துள்ளது *ரவி மோகனின் ‘கராத்தே பாபு’ பட ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது *’சியான் 63′ படத்தில் சுருதி ஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார் *கென் கருணாஸ் நடிக்கும் ‘யூத்’ படத்தின் முதல் பாடல் நாளை ரிலீசாகும் என அறிவிப்பு
News February 6, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (பிப்.6) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News February 6, 2026
விஜய் வீட்டை விட்டு வெளியே வர முடியாது: ஆர்.பி. உதயகுமார்

கரூர் சம்பவத்தின் போது தன்னை பார்க்க வந்தவர்களையே காப்பாற்றாமல் ஓடிய விஜய், TN-ஐ எப்படி காப்பாற்றுவார் என ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். தவெகவை விட கடுமையான விமர்சனங்களை முன்வைக்க தங்களுக்கு தெரியும் என்றும், அதிமுக விமர்சித்தால் வீட்டை விட்டு கூட விஜய்யால் வெளியே வர முடியாது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், விஜய்க்கு அடிப்படை மனிதநேயமே இல்லை எனவும் கடுமையாக சாடியுள்ளார்.


