News January 14, 2026

ராமதாஸை சமாதானம் செய்ய முயல்கிறதா பாஜக?

image

அன்புமணி ஏற்கெனவே இணைந்துவிட்டதால், அதிமுக கூட்டணியில் ராமதாஸ் இணைய தயக்கம் காட்டுவதாக பேச்சு எழுந்தது. இந்நிலையில், ராமதாஸ் தரப்புடன் பாஜக முக்கிய தலைவர்கள் சமாதானப் பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளதாகவும், மோடி தலைமையில் ஜன.23-ல் மதுராந்தகத்தில் நடைபெறவிருக்கும் NDA கூட்டணித் தலைவர்கள் <<18852821>>பொதுக்கூட்டத்தில் <<>>அவரை பங்கேற்க வைக்க முயற்சி மேற்கொள்வதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News January 26, 2026

தூத்துக்குடி: இந்தியன் வங்கியில் வேலை!

image

இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான Indbank Merchant Banking Services Ltd -இல், தற்போது Relationship Manager, Digital Marketing Specialist உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு வேலைக்கேற்ப டிகிரி முடித்திருந்தால் போதும். சம்பளம் ரூ.35,000 முதல் ரூ.66,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.25ம் தேதிக்குள் <>இங்கே க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

News January 26, 2026

70% வரி குறைப்பு.. கார்கள் விலை குறைகிறது

image

இந்தியா, ஐரோப்பிய யூனியன் இடையே வரலாற்று சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நாளை கையெழுத்தாகிறது. இதில், ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட வகை கார்கள் மீதான வரி 110%-ல் இருந்து 40% ஆக குறைக்கப்படவுள்ளது. ₹16 லட்சத்துக்கு மேல் இறக்குமதி விலை உள்ள கார்களுக்கு இது பொருந்தும். இதனால் பென்ஸ், BMW உள்ளிட்ட கார்களின் விலை இந்தியாவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News January 26, 2026

இந்திய ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

image

காயம் காரணமாக NZ T20I தொடரில் இருந்து விலகிய, திலக் வர்மா 5-வது T20I-க்குள் முழு உடற்தகுதி பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன. இதனால், அவர் வரும் பிப்ரவரி 4-ம் தேதி, SA-க்கு WC T20I பயிற்சி ஆட்டத்தில் விளையாடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. T20-ல் அசுர பலத்துடன் உள்ள அணிக்கு, திலக் வர்மாவின் வருகை மேலும் பலத்தை அதிகரிக்க செய்யும்.

error: Content is protected !!