News January 14, 2026
தமிழில் தொடங்கி, தமிழில் முடித்த PM மோடி!

டெல்லியில் நடந்த <<18853863>>பொங்கல் விழாவில்<<>>, பொங்கல் வாழ்த்தை தமிழில் கூறி, PM மோடி தனது உரையை தொடங்கினார். உலகின் பழமையான தமிழ் கலாசாரம் இந்தியாவின் பெருமை என்று புகழ்ந்த அவர், தமிழ் சமுதாயம் விவசாயிகளை வாழ்வின் ஒரு அங்கமாக கருதுவதாக தெரிவித்தார். விவசாயிகளுக்காக மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருவதாக கூறிய அவர், ‘வாழ்க தமிழ், வாழ்க பாரதம்’ என்று தமிழிலேயே கூறி தனது உரையை முடித்துக்கொண்டார்.
Similar News
News January 27, 2026
ஆட்டம் போடும் பொம்மையாக அதுல்யா ரவி

நடிகை அதுல்யா, கடற்கரையில் ஆடும் சூரியன் போன்ற தனது லேட்டஸ்ட் போட்டோக்களை பகிர்ந்துள்ளார். அதில், அவரது புன்னகை பூக்கும் பூக்களாக நேசிக்க வைக்கிறது. வானில் மறையும் வானவில்லின் வண்ணமாய் இருக்கிறார். இதயத்தை கொள்ளும் மௌனம் மீட்கும் பார்வையால், ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்கிறார். இந்த போட்டோஸ் உங்களுக்கும் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.
News January 27, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஜன.27) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News January 27, 2026
வெயிட்டை குறைக்க வெறி.. நோயாளியான பெண்

சீனாவில் பெண் ஒருவர், தனது தோழியின் திருமணத்தில் மணப்பெண் தோழியாக நிற்க, உடல் எடையை குறைக்க முடிவு செய்தார். இதற்காக அவர் 2 மாதங்களில் சுமார் 15 கிலோ வரை எடையை குறைத்தார். அவர் மேற்கொண்ட தீவிர உடற்பயிற்சி மற்றும் உணவுக்கட்டுப்பாடு காரணமாக, தலைசுற்றல் மற்றும் இதயத் துடிப்பு அதிகரிப்பு போன்ற பின்விளைவுகள் ஏற்பட்டன. டாக்டரை அணுகியபோது, அவருக்கு prediabetes நோய் ஏற்பட்டது தெரிந்தது.


