News January 14, 2026

கிருஷ்ணகிரி: சம்பளப் பிரச்சனையா? உடனே CALL!

image

கிருஷ்ணகிரி மக்களே, உங்க கம்பெனியில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ, சம்பளம் தர லேட் ஆனாலோ, குறைவான சம்பளம் தந்தாலோ (அ) தவணைகளாக சம்பளம் தந்தாலோ, இனி கவலைப்பட வேண்டாம். நீங்கள் தொழிலாளர் நல ஆணையத்தில் புகார் செய்யலாம். இந்த லிங்கிலோ அல்லது கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 0422-2247917, தொழிலாளர் இணை ஆணையர் – 0427-2405746, எண்களிலோ புகார் செய்யலாம். ஷேர்!

Similar News

News January 30, 2026

கிருஷ்ணகிரி: தீ விபத்தில் துடி துடித்து பலி!

image

நாகரசம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (73). இவர் கடந்த ஜனவரி 22-ம் தேதி தோட்டத்தில் குப்பைகளுக்கு தீ வைத்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக இவர் மீது தீ பரவியது. இதில் படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (ஜன.30) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 30, 2026

கிருஷ்ணகிரி: குடியால் பறிபோன உயிர்!

image

தருமபுரியை சேர்ந்த கூலி தொழிலாளி மாதேஷ் (39). இவர் ஓசூரில் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு தொடர் குடி பழக்கம் இருந்தது. இந்நிலையில் நேற்று (ஜன.29) அக்ரஹாரம் பகுதியில் நடந்து செல்லும் போது திடீரென மயங்கி விழுந்தார். இவரை அப்பகுதி மக்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மாலை உயிரிழந்தார். இது குறித்து மத்திகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 30, 2026

கிருஷ்ணகிரி: டிகிரி போதும்., விவசாய வங்கியில் வேலை ரெடி!

image

கிருஷ்ணகிரி மக்களே, தேசிய விவசாய – கிராம வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு பணிகளுக்கு 162 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <>ibpsreg.ibps.in/nabhindec25/<<>> – என்ற தளத்தில் பிப். 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ,32,000 வழங்கப்படும். தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE IT.

error: Content is protected !!