News January 14, 2026

காஞ்சிபுரத்தில் கேஸ் பிரச்னையா..?

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சமையல் எரிவாயு நுகர்வோர் சந்திக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், வரும் ஜனவரி 26ஆம் தேதி அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் சிலிண்டர் முன்பதிவு, விநியோக தாமதம் மற்றும் கூடுதல் கட்டணம் குறித்த புகார்களை பொதுமக்கள் நேரில் தெரிவித்துத் தீர்வு பெறலாம்.

Similar News

News January 22, 2026

காஞ்சிபுரத்தில் அதிகரிக்கும் சிக்குன்குனியா பாதிப்பு!

image

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் சிக்கன் குனியா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில், தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு மாநில பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. டெங்கு, சிக்கன் குனியா நோய்க்கு தனி வார்டுகள் அமைப்பது, முன்கூட்டியே பரிசோதனைகள், நடமாடும் மருத்துவக்குழு உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News January 22, 2026

காஞ்சி: வெறிநாய் கடித்து பள்ளி மாணவன் பலி….

image

காஞ்சிபுரத்தில் நாய் கடித்து பள்ளி மாணவர் ரேபிஸ் நோய் தாக்கி உயிரிழந்தார். சின்னிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சபரிவாசன் என்ற 15 வயது சிறுவனை ஒரு மாதத்திற்கு முன்பு நாய் கடித்துள்ளது. இதுகுறித்து பெற்றோர் திட்டுவார்கள் என பயந்து நாய் கடித்ததை சொல்லாத நிலையில், ரேபிஸ் நோய் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

News January 22, 2026

காஞ்சி: நகை திருடு போச்சா? கவலை வேண்டாம்!

image

தமிழகத்தில் நகை உள்ளிட்ட உடமைகள் திருடு போனால், பொதுமக்கள் காவல் நிலையம் செல்லாமலேயே <>TN Police Citizen Services <<>>இணையதளம் அல்லது ‘Citizen’s Mobile App’ மூலம் ஆன்லைனில் எளிதாகப் புகார் அளிக்கலாம். இதில் பெறப்படும் புகார்களுக்கு ரசீது வழங்கப்பட்டு, உரிய விசாரணை நடத்தப்படும். இந்தத் தொழில்நுட்ப வசதி மூலம் பொதுமக்கள் தங்கள் புகாரின் நிலையை வீட்டிலிருந்தே கண்காணித்துத் தீர்வுகளைப் பெற முடியும். ஷேர்!

error: Content is protected !!