News January 14, 2026
குமரியில் புற்றுநோய் கண்டறிதல் முகாம் – அமைச்சர்

”புற்றுநோய் இல்லா குமரி மாவட்டம்” என்னும் இலக்கிற்காக முதற்கட்ட களப்பணிகள் பத்மநாபபுரம் தொகுதிக்குட்பட்ட காட்டாத்துறை ஊராட்சியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் முதல் புற்றுநோய் கண்டறிதல் மருத்துவ முகாம் காட்டாத்துறை அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் ஜன.16, 17 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. எனவே, இதை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 21, 2026
குமரி: வாக்காளர்கள் கவனத்திற்கு…

குமரி மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!
News February 21, 2026
குமரி மக்களே… புகார் எண்கள் அறிவித்தார் SP ஸ்டாலின்

குமரி மாவட்ட மக்கள் தங்களது குறைகளை நேரடியாக தெரிவிக்க SP ஸ்டாலின் புகார் எண்கள் அறிவித்துள்ளார். அதில் புகார் மனுக்கள் மீதான போலீஸ் விசாரணை, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், காவல்துறை மக்கள் உறவை மேம்படுத்த ஆலோசனைகள், சட்டம் ஒழுங்கு, போதைப் பொருட்கள் தொடர்பான தகவல்களை 7708239100, 6385211224 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம். இதில் புகார் செய்பவரின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும். SHARE IT
News February 21, 2026
குமரி: அரசு பஸ் மோதி விபத்து

நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜாண் ரோஸ் (65). இவர் நேற்று மார்த்தாண்டம் சந்தையின் முன்பு சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது பேருந்து நிலையம் வந்து கொண்டிருந்த அரசு பேருந்து ஜாண் ரோஸ் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். இதையடுத்து அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


