News January 14, 2026
திமுகவா? தவெகவா? குழப்பத்தில் காங்கிரஸ்!

TN-ல் பல ஆண்டுகளாக ஆட்சியில் பங்கு இல்லாமல் இருக்கும் காங்., 2026 தேர்தலில் ஆட்சியில் பங்கு பெறுவதில் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்., மூத்த தலைவர்கள் வெற்றியை உறுதி செய்ய திமுக கூட்டணியே சிறந்தது என்கின்றனர்; ஆனால், இளம் தலைவர்களோ தவெகவிடம் 75 இடங்கள் வரை பெறுவதோடு, ஆட்சியில் பங்குபெறலாம் என கருதுவதாக கூறப்படுகிறது. இதனால், காங்.,-ல் குழப்பம் நீடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Similar News
News February 4, 2026
ஒரே ஒரு AI கருவி.. ₹2 லட்சம் கோடி காலி

புதிய AI தானியங்கி கருவியால் இந்திய IT பங்குகள் இன்று பெரியளவில் சரிந்துள்ளன. AI வளர்ச்சியால் IT நிறுவனங்களின் எதிர்காலம் குறித்த கவலையால் முதலீட்டாளர்கள், IT பங்குகளை பெருமளவில் விற்றனர். இதனால், இன்று ஒரேநாளில் IT நிறுவனங்களின் சந்தை மதிப்பு ₹2 லட்சம் கோடி வரை குறைந்தது. IT நிறுவனங்களின் லாபம் மற்றும் சந்தையில் உள்ள மதிப்பை AI பாதிக்கும் என்ற கவலையே இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
News February 4, 2026
‘வருங்கால முதல்வரே வருக வருக’.. கடுப்பான வைகோ

மயிலாடுதுறை அருகே கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவிற்கு சென்ற வைகோவை பார்த்து, ‘வருங்கால முதல்வரே வருக வருக’ என மதிமுக தொண்டர்கள் முழக்கம் எழுப்பினர். இதை சற்றும் எதிர்பார்க்காத வைகோ, தொண்டர்களை கடிந்து கொண்டார். இதன்பின் அவர் பேசுகையில், மதிமுக பெரிய வாக்கு வங்கி உள்ள கட்சி இல்லை என்றும், மதிமுக தொடங்கிய காலத்தில் இருந்தே, நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என எப்போதும் கூறியது இல்லை எனவும் தெரிவித்தார்.
News February 4, 2026
பில் கேட்ஸ் பதில் சொல்லியே ஆகனும்: மெலிண்டா

<<18548710>>எப்ஸ்டீன் கோப்புகளில்<<>> வெளியான புகைப்படங்கள், வீடியோக்கள் தனக்கு விவரிக்க முடியாத துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக பில் கேட்ஸின் Ex மனைவி மெலிண்டா தெரிவித்துள்ளார். தன் மகள் வயதில் இருக்கும் அச்சிறுமிகளை பார்க்கும்போது இதயம் நொறுங்கி விட்டது என்றும், இதில் தொடர்புடைய பில் கேட்ஸ் உள்பட அனைவரும் இதுகுறித்து எழுப்பபடும் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.


