News January 14, 2026
நள்ளிரவில் பஸ்களை ஆய்வு செய்த அமைச்சர்!

பொங்கல் பண்டிகையை கொண்டாட நேற்று ஏராளமான மக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். இந்நிலையில், நள்ளிரவில் கிளாம்பாக்கம் பஸ் முனையத்தில் அமைச்சர் சிவசங்கர் திடீரென ஆய்வு செய்தார். அப்போது, குறிப்பிட்ட நேரத்தில் பேருந்துகள் புறப்படுகின்றனவா, டிக்கெட் விலை சரியாக உள்ளதா என்பதை மக்களிடமும் கேட்டறிந்தார். மேலும், கூடுதல் கட்டணத்தை தடுக்க 36 குழுக்கள் தணிக்கை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News February 11, 2026
சற்றுமுன்: பள்ளியில் நடந்த கொடூரம்.. 10 பேர் பலி

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் அதிபயங்கர துப்பாக்கி சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது. இதில் 10 பேர் பலியாகியுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் பெண் இறந்துவிட்டதாக கூறப்படும் நிலையில், 25 பேர் காயமடைந்துள்ளனர். தாக்குதல் நடத்தப்பட்டது ஏன், யார் மீதான தாக்குதல் இது, இறந்தவர்கள் மாணவர்களா என்பதை பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
News February 11, 2026
கைதியிடம் அடிவாங்கிய மு.க.ஸ்டாலின்.. SHOCKING

மிசாவில் கைதானபோது சிறையில் பல கொடுமைகளை அனுபவித்ததாக CM ஸ்டாலின் கூறியுள்ளார். விஞ்ஞானி நம்பி நாராணயனுடன் கலந்துரையாடிய அவர், தொழு நோயாளிகள் அறையில் தன்னை அடைத்ததாகவும், சிறுநீர் கழிக்கும் பானை, தண்ணீர் பானை இரண்டும் பக்கத்தில் இருக்கும் அளவுக்கு அசுத்தம் நிறைந்த இடமாக அது இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், ஆயுள் கைதிகளை வைத்து தினமும் அடித்து துன்புறுத்தியதாகவும் அவர் பேசியுள்ளார்.
News February 11, 2026
10-வது போதும், தேர்வு கிடையாது: ₹29,000 சம்பளம்!

அஞ்சல் துறையில் 28,740 கிளை போஸ்ட் மாஸ்டர் (BPM) & உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (ABPM) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன ➤TN-ல் மட்டும் 2,000 காலியிடங்கள் உள்ளன ➤வயது: 18-40 ➤தகுதி: 10th Pass, சைக்கிள் ஓட்ட தெரிய வேண்டும் ➤தேர்வு கிடையாது ➤சம்பளம் BPM: ₹12,000- ₹29,380 வரை. ABPM: ₹10,000- ₹24,470 வரை ➤விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்.14. ➤விண்ணப்பிக்க இங்கே <


