News January 14, 2026

வேலூரில்: உண்டியல் திருடனை சுற்றி வளைத்த மக்கள்!

image

குடியாத்தம் பலமநேர் ரோட்டில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் 2 வாலிபர்கள் நேற்று நூலில் காந்தத்தை கட்டி உண்டியலுக்குள் விட்டு பணத்தை திருட முயன்றனர். பொதுமக்கள் அவர்களை சுற்றி வளைத்து பிடித்த போது ஒருவர் தப்பி ஓடிவிட்டார். பிடிபட்ட மற்றொரு நபரை குடியாத்தம் டவுன் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர் கமல் (26) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Similar News

News January 26, 2026

வேலூர்: ரூ.6 செலுத்தி ரூ.1 லட்சம் பெறலாம்!

image

வேலூர் மக்களே, போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். உடனே SHARE பண்ணுங்க!

News January 26, 2026

வேலூர்: காந்தி சிலைக்கு மாலை அணிவித்த கலெக்டர்

image

77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று (ஜனவரி 26) வேலூர் கோட்டை நுழைவு வாயிலில் உள்ள அண்ணல் மகாத்மா காந்தியடிகள் திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்த குமார், துணை மேயர் சுனில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News January 26, 2026

வேலூர்: இலவச சேவைக்கு இனி ஒரு message போதும்!

image

வேலூர் மக்களே, மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குகிறது. இந்த எண்ணுக்கு 72177 11814 போனில் இருந்து மெசேஜ் அனுப்பினால் போதும். உங்கள் (சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு) போன்றவைகளுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை பெறலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க

error: Content is protected !!