News January 14, 2026
பொங்கல் விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சி – ஆட்சியர்

பொங்கல் விழாவை ஒட்டி தமிழர்களின் பண்பாட்டு பெருமைகளை பறைசாற்றும் வகையில் நடைபெறும் சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளை முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்க உள்ளார். அதன் அடிப்படையில் கலை பண்பாட்டு துறை சார்பாக தேனி மாவட்டத்தில் ஜனவரி 15ஆம் தேதி பென்னிகுவிக் மணிமண்டபத்தில் 16ஆம் தேதி வைகை அணை 17ஆம் தேதி சுருளி அருவியில் பொங்கல் விழா கலை நிகழ்ச்சி நடைபெறும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 31, 2026
தேனி: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News January 31, 2026
தேனி: 124 கிலோ புகையிலை கடத்தல்

கடமலைக்குண்டு காவல் நிலைய போலீசார் குற்ற தடுப்பு சம்பந்தமாக நேற்று (ஜன.30) வாகன சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது அந்த வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் 124 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அதனை பறிமுதல் செய்த போலீசார் புகையிலைப் பொருட்கள் கடத்தலில் ஈடுபட்ட முருகன் (53), பிரபாகரன் (32) ஆகிய இருவரை கைது செய்தனர்.
News January 31, 2026
தேனி: Spam Calls-க்கு இனி END CARD

தேனி மாவட்ட மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க


