News January 14, 2026
வங்கதேசத்திற்கு அதிர்ச்சி கொடுத்த ICC

T20WC: பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி, இந்தியாவில் நடைபெறும் போட்டிகளை மாற்ற கோரிக்கை வைத்த வங்கதேசத்திற்கு ஐசிசி, ‘NO மாற்றமுடியாது’ என்று கூறியுள்ளது. போட்டி திட்டங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டதால் வங்கதேசம் தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யும்படி ஐசிசி கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால், விடாப்பிடியாக வங்கதேசம் தொடர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது.
Similar News
News January 31, 2026
நெல்லையில் இன்று இந்த பகுதிகளில் மின் தடை!

மேலக்கல்லூர், கங்கைகொண்டன், வன்னிக்கோனேந்தல், மூன்றடைப்பு, பாளை, ரஸ்தா, கரந்தாநேரி ஆகிய மின் நிலையங்களில் இன்று (ஜன 31) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. சுத்தமல்லி, சங்கன் திரடு, பாலாமடை, குப்பகுறிச்சி, மூவிருந்தாளி, தேவர்குளம், தோட்டாக்குடி, மருதகுளம், பாளை மார்க்கெட், திருச்செந்தூர் சாலை, பட்டவர்த்தி, ஆம்பூரணி, சிங்கநேரி, அம்பலம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் காலை 9 மணி – 5 மணி வரை மின் தடை.
News January 31, 2026
இன்று மறந்தும் இவற்றை செய்து விடாதீர்கள்!

ஆன்மீக குறிப்புகளின் படி, ஒவ்வொரு நாளிலும் குறிப்பிட்ட சில விஷயங்களை மறந்தும் செய்துவிட கூடாது என்ற நம்பிக்கை உள்ளது. அதன்படி சனிக்கிழமையில், எண்ணெய் பொருள்கள் வாங்கக்கூடாது ➤கசப்பு உணவுகளை சமைக்க கூடாது ➤நகம், முடி வெட்டக்கூடாது ➤வீடு துடைக்கவோ, கழுவவோ கூடாது ➤புது துணிகள் வாங்க வேண்டாம் ➤இறப்பு வீட்டிற்கு சென்றால், அதிக நேரம் இருக்க வேண்டாம் ➤திருஷ்டி கழித்து விடாதீர்கள். SHARE IT.
News January 31, 2026
திமுக ஆட்சிக்கு இன்னும் 2 அமாவாசைதான்: EPS

புதிய புதிய திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றுவதில் நம்பர் 1 CM, ஸ்டாலின்தான் என EPS விமர்சித்துள்ளார். தேர்தல் நெருங்குவதால் பல திட்டங்களை திமுக அறிவிப்பதாகவும், திட்டங்களுக்கு பெயர் வைப்பதில் நோபல் பரிசு கொடுத்தால் ஸ்டாலினுக்கு பொருத்தமாக இருக்கும் எனவும் சாடியுள்ளார். விரைவில் தேர்தல் வருவதால், திமுக ஆட்சியின் ஆயுள் காலம் இன்னும் 2 அமாவாசைதான் எனவும் கூறியுள்ளார்.


