News January 14, 2026
‘ஜனநாயகன்’ சரியான நேரத்தில் வெளியாகும்: கார்த்தி

‘ஜனநாயகன்’ படம் தாமதமாக வந்தாலும், சரியான நேரத்தில் வெளியாகும் என நம்புவதாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். தனது முதல் படத்தில் தொடங்கி தற்போதைய ‘வா வாத்தியார்’ வரையிலும் பல தடங்கலை கடந்தே படங்கள் வெளியாவதாகவும், ஒரு நல்ல கதை தனக்கு தேவையானதை தானே அமைத்துக் கொள்ளும் என்றும் அவர் கூறியுள்ளார். எனவே, நமது கட்டுப்பாட்டில் இல்லாதவை குறித்து கவலைப்படக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 25, 2026
TN-ஐ பேரழிவில் நிறுத்திய கேடுகெட்ட ஆட்சி: நயினார்

பிரபல ரவுடியை அழைத்து வந்த போலீசார் மீது <<18945501>>நாட்டு வெடிகுண்டு<<>> வீசப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக நயினார் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அதலபாதாளத்தில் வீழ்ந்து கிடப்பதற்கு இந்த ஒற்றைச் சம்பவமே சாட்சி. மக்கள் பாதுகாப்பை செதில் செதிலாகச் சிதைத்தது மட்டுமல்லாது, தற்போது போலீசார் பாதுகாப்பையும் சூறையாடி, தமிழகத்தை பேரழிவில் நிறுத்தியுள்ளது இந்த கேடுகெட்ட ஆட்சி என விமர்சித்துள்ளார்.
News January 25, 2026
ராசி பலன்கள் (25.01.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News January 25, 2026
மீண்டும் தமிழகம் வரும் அமித்ஷா

மாற்று கட்சிகளை கூட்டணியில் இணைப்பதில் முதலில் தொய்வில் இருந்த NDA கடந்த 2 வாரத்தில் வேகமாக செயல்பட்டது. அதன் விளைவாக பாமக, அமமுக உள்ளிட்ட பல கட்சிகளை கூட்டணியில் இணைத்து தங்களின் பலத்தை NDA அதிகரித்தது. இந்நிலையில், வரும் ஜன.28, 29 தேதிகளில் அமித்ஷா தமிழகம் வரப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது தொகுதி பங்கீடு, தேர்தல் வியூகம் குறித்து ஆலோசிக்க வாய்ப்புள்ளது.


