News January 14, 2026
நீலகிரி: எம்.பி. ஆ.ராசா தலைமையில் ஆய்வுக் கூட்டம்

நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், பல்வேறு துறைகளின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தலைமையில் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுடன் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
Similar News
News January 28, 2026
நீலகிரி: EC, பட்டா, சிட்டா.. இனி WhatsApp-ல்

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1) 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2) WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3) மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4) நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க
News January 28, 2026
BREAKING: ஊட்டி ரயில் சேவை ரத்து

மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற மலை ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நேற்று மாலை குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் வந்த போது கல்லாறு – ஹில்குரோ நிலையங்களுக்கு இடையே ரயில் பாதையில் மரங்கள் முறிந்து விழுந்து தண்டவாளம் சேதமடைந்தது தெரிந்து மீண்டும் குன்னூர் சென்றது. தண்டவாள சீரமைப்பு பணிக்காக இன்று (ஜன.28) காலை மேட்டுப்பாளையம்-ஊட்டி சேவையை ரத்து செய்து ரயில்வே அறிவித்துள்ளது.
News January 28, 2026
வீடியோவால் பரபரப்பு: பந்தலூர் வனத்துறை எச்சரிக்கை!

பந்தலூர் அருகே அத்திகுன்னா எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் குறித்து வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். சிறுத்தை நடமாட்டம் குறித்த வீடியோ பரவிய நிலையில் வனவர் சுரேஷ் குமார் தலைமையிலான வனக்குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு தேடி வர வாய்ப்புள்ளது. எனவே பாதுகாப்புடன் இருக்க அறிவுரை வழங்கினர்.


