News January 14, 2026
ஜனவரி.16-ல் இறைச்சி கடைகளை மூட உத்தரவு!

சேலம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஜனவரி 16-ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அனைத்து இறைச்சி கடைகளும் மூடப்பட வேண்டுமென ஆணையாளர் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் கோழி, ஆடு, மீன் உள்ளிட்ட எந்தவித இறைச்சி கடைகளும் திறக்க கூடாது என்றும், மீறி செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
Similar News
News January 27, 2026
ஆத்தூர் அருகே பரபரப்பு.. அக்காவுக்கு கத்திக்குத்து

ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த ராம்பிரபு-க்கும், அவரது அக்கா முகந்திக்கும் சொத்து தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில், முகந்தி மற்றும் அவரது உறவினர்கள் 2 பேரை ராம்பிரபு கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடினார். தாக்குதலை தொடர்ந்து அங்கிருந்து ராம்பிரபு, தப்பி ஓடும் போது சாலையில் சென்ற பேருந்து அவர் மீது மோதியது. இதில் ராம்பிரபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
News January 27, 2026
POWER CUT: சேலத்தில் இப்பகுதியில் மின்தடை

மல்லியகரை, ஈச்சம்பட்டி, சீலியம்பட்டி,கீரிப்பட்டி,வி.பி.குட்டை, சிங்கிலியன்கோம்பை, கருப்பூர், காமலாபுரம், எட்டிகுட்டப்பட்டி, மாமாங்கம்,சூரமங்கலம், ஜங்ஷன்,5 ரோடு, குரங்குச்சாவடி, நரசோதிப்பட்டி, ரெட்டியூர், உடையாப்பட்டி, அம்மாபேட்டை, வீராணம், பொன்னம்மாபேட்டை, அயோத்தியாபட்டணம்,வலசையூர், காரிப்பட்டி, நங்கவள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (ஜன.27) காலை 9 மணி மாலை 5 வரை மின்தடை ஆகும்.
News January 27, 2026
ஜன.30 முதல் கருட சேவையும் கல்யாண வைபவமும்!

சேலம் கோட்டை அழகிரிநாதர் கோயிலில் பஞ்ச கருட சேவை மற்றும் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் வரும் ஜனவரி 30-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 1-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.ஜனவரி 30-ஆம் தேதி காலை 7 மணிக்கு ஆஞ்சநேயர் மற்றும் கருடாழ்வாருக்கு விசேஷ திருமஞ்சனம் நடைபெற்று, அதனைத் தொடர்ந்து திருவீதி உலாவும் நடைபெறும். பக்தர்கள் ததேவையான அனைத்து ஏற்பாடுளும் செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


