News May 5, 2024
கொலையா? தற்கொலையா?

மறைந்த நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் கடிதம் தொடர்பாக விசாரித்து வருவதாக டிஐஜி மூர்த்தி விளக்கமளித்துள்ளார். உடற்கூராய்வு முடிவு வந்த பிறகே கொலையா, தற்கொலையா என்பது தெரியவரும் என்று கூறிய அவர், கடிதத்தில் பெயர்கள் உள்ள நபரிடம் விசாரணை நடப்பதாகவும் தெரிவித்தார். அத்துடன், ஜெயக்குமார் மாயம் என புகார் தரும்போதே காவல்துறை, மருமகனுக்கு எழுதிய 2 கடிதங்கள் தரப்பட்டதாகவும் கூறினார்.
Similar News
News September 23, 2025
பிராமணர் என்பதால் இட ஒதுக்கீடு இல்லை: நிதின் கட்கரி

கடவுள் எனக்கு செய்த மிகப்பெரிய உதவி என்னவென்றால், நான் ஒரு பிராமணன், இதனால் எனக்கு இடஒதுக்கீடு கிடைக்கவில்லை என்று காமெடியாக பலரிடம் கூறுவேன் என நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். நாக்பூரில் நடந்த நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், எந்த மனிதரும் சாதி, மதம், மொழியால் உயர்ந்தவர் அல்ல, மாறாக அவர்களின் குணத்தாலேயே உயர்ந்தவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார். பிராமணர் குறித்த நிதினின் கருத்து பேசுபொருளாகியுள்ளது.
News September 23, 2025
தூங்கும் போது அதிக நேரம் சிறுநீரை அடக்குகிறீர்களா?

இரவில் பலரும் துக்கத்தை கெடுத்து கொள்ளக்கூடாது என்பதற்காக, அப்படியே சிறுநீரை அடக்குவார்கள். ஆனால், அது நோய்களுக்கு காரணமாகலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சிறுநீர்ப்பை, நரம்புகளில் இது பாதிப்பை ஏற்படுத்தும். சிறுநீர் கழிக்கும் தூண்டுதலை உதாசினப்படுத்தினால், இடுப்பு தசைகள் வலுவிழக்கும். இதனால், கிட்னியில் கல் உண்டாகலாம். சிறுநீர்ப்பாதை தொற்றும் ஏற்படும். அடுத்த வாட்டி யோசியுங்க!
News September 23, 2025
இந்திய ரூபாயை இங்கெல்லாம் அப்படியே யூஸ் பண்ணலாம்

பொதுவாகவே நாம் வெளிநாடுகளுக்கு சென்றால், அங்குள்ள நாணயத்திற்கு ஏற்ப நமது ரூபாயை மாற்றுவோம். ஆனால், நேபாளம், பூட்டான், இலங்கை, சிங்கப்பூர், UAE, இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் நமது ரூபாய் நோட்டுகளையே பயன்படுத்தலாம். அங்குள்ள உணவகங்கள், ஹோட்டல்கள் (Rooms), டாக்ஸிகள் ஆகியவற்றில் இந்திய ரூபாய் நோட்டுகள் செல்லுபடியாகும். இது பொதுவாக சுற்றுலா பயணிகளை கவரும் நோக்கில் செயல்படுத்தப்படுகிறது.