News January 14, 2026

ஈரானியர்களே போராட்டத்தை கைவிட வேண்டாம்: டிரம்ப்

image

தொடர்ந்து போராடி நாட்டின் நிறுவனங்களைக் கைப்பற்றுமாறு ஈரானியர்களுக்கு US அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். மேலும், ஈரானில் போராடும் மக்களுக்கு உதவி தயாராக இருக்கிறது எனவும், மக்களை கொல்வதை நிறுத்தும் வரை ஈரானிய அதிகாரிகளை சந்திக்கவே மாட்டேன் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானில் வெடித்துள்ள போராட்டத்தால் இதுவரை சுமார் 2,000 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News

News February 2, 2026

10-ம் வகுப்பு மாணவி கர்ப்பம்.. வசமாக சிக்கினார்

image

புத்தகத்தை சுமக்க வேண்டிய வயது.. ஆனால், வயிற்றில் குழந்தையை சுமந்து கொண்டிருக்கிறாள் அந்த 10-ம் வகுப்பு மாணவி. மதுரையில்தான் இந்த அவலம் நடந்திருக்கிறது. பிரபாகரன்(29) என்பவருடன் அந்த மாணவிக்கு பழக்கம் ஏற்பட, இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இப்போது, சிறுமி கர்ப்பமாக இருக்கிறாள். பிரசவ வலியால் அரசு ஹாஸ்பிடலுக்குச் சென்றதால் விஷயம் வெளியே தெரியவந்துள்ளது. தற்போது, பிரபாகரன் கம்பி எண்ணுகிறார்.

News February 2, 2026

தங்கம் விலை உயர்வு ஏன்? நிர்மலா சீதாராமன் விளக்கம்!

image

உலகளாவிய நிச்சயமற்ற தன்மை காரணமாகவே தங்க விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவுவதாக FM நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். உலகின் எந்த நாட்டு கரன்சி மீதும் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை இல்லை; அதனால் பல மத்திய வங்கிகள் தங்கத்தில் முதலீடு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். நேற்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி குறித்து எந்த புதிய அறிவிப்பும் வெளியாகவில்லை.

News February 2, 2026

உங்களிடம் தங்கப் பத்திரம் இருக்கா? இது உங்களுக்கு தான்

image

பட்ஜெட்டில் தங்கப் பத்திரங்களுக்கான வரி விலக்கு விதிகளில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. RBI-யிடம் நேரடியாக வாங்கும் தங்கப் பத்திரங்களை முதிர்வு காலம் வரை வைத்திருந்தால் மட்டுமே வரி விலக்கு அளிக்கப்படும். மாறாக பங்குச் சந்தையில் வாங்கி முதிர்வு காலம் வரை வைத்திருந்தாலோ, முதிர்வு காலத்திற்கு முன் விற்றாலோ நீங்கள் பெறும் லாபத்திற்கு வரி செலுத்த வேண்டும். வட்டி விகிதத்தில் (2.5%) மாற்றமில்லை.

error: Content is protected !!