News January 14, 2026

9 புதிய அம்ரித் பாரத் ரயில்கள் அறிவிப்பு!

image

விரைவில் 9 புதிய அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவை தொடங்கப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். நாட்டின் நீண்ட தூரப் பயணங்களுக்காக ஏசி இல்லாத படுக்கை வசதியுடன் அம்ரித் பாரத் ரயில்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மணிக்கு 130 கிமீ வேகத்தில் TN உட்பட இந்தியா முழுவதும் 9 ரயில்கள் இயக்கப்பட உள்ளன. எந்தெந்த வழித்தடங்களில் அவை இயங்கும் என்பதை வலது பக்கம் Swipe செய்து பார்க்கலாம்.

Similar News

News February 13, 2026

சேலம் தவெக வேட்பாளர் பட்டியல் வெளியாகிறதா?

image

சேலம் சீலநாயக்கன்பட்டி, கேவிபி காா்டன் உள் வளாகத்தில் இன்று (பிப்.13) தவெக கூட்டம் நடைபெறவுள்ளது. சேலம் மாவட்டத்தில் தவெகவின் பெரிய நிகழ்வாக இது கருதப்படுகிறது. எனவே இதில் சேலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளின் தவெக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படுமா? அதில் மாவட்ட செயலாளர்களே இடம் பெறுவார்களா? என விஜய்யின் உரையை தவெக தொண்டர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

News February 13, 2026

கூட்டணி கட்சிக்கு எதிராகவே கருத்து சொன்ன வைகோ

image

கூட்​ட​ணி​யில் உள்ள ஒவ்​வொரு கட்​சியும் ஒவ்வொரு கருத்தை சொல்லி வருவதாக வைகோ கூறியுள்ளார். ஆட்​சி​யில் பங்கு, அதிக இடங்​கள் வேண்​டும் என்று கேட்பது அவர​வர் உரிமை என்ற அவர், ஆனால் தனிப்​பெரும்​பான்மை பெற்று திமுக ஆட்சி அமைக்​கும்​போது காங்கிரஸின் இந்த கோரிக்​கை​கள் எல்​லாம் எடு​ப​டாது, ஏற்​கப்​ப​டாது என்றார். மேலும், மதிமுக இதுபோல எவ்​வித நிபந்தனையும் விதித்ததில்லை என தெரிவித்துள்ளார்.

News February 13, 2026

வெறும் நாணயங்கள் அல்ல.. நினைவுகள்!

image

மேலே உள்ள போட்டோவில் இருப்பவை, ₹2 காசு முதல் ₹25 காசு வரையிலான நாணயங்கள் ஆகும். இவையெல்லாம், இப்போது புழக்கத்தில் இல்லை என்றாலும், 1990ல் பிறந்தவர்களின் மறக்க முடியாத நினைவுகள். கமர்க்கட்டு, விரலில் மாட்டிக் கொள்ளும் சுத்து மிட்டாய், தேன் மிட்டாய், பட்டாணி என அப்போதெல்லாம் சுவைத்தவை நினைவிற்கு வந்து போகிறது. நீங்கள் குழந்தையாக இருந்தபோது இந்த நாணயங்கள் இருந்ததா? உங்கள் நினைவுகளை சொல்லுங்க.

error: Content is protected !!