News January 13, 2026

இது விண்வெளி மிராக்கிள்!

image

18 செயற்கைக் கோள்களுடன் நேற்று ஏவப்பட்ட ISRO-வின் PSLV-C62 ராக்கெட் மிஷன் 3-ம் நிலையில் கட்டுப்பாட்டை இழந்தது. எனினும் அதற்கு முன்னதாகவே பிரிந்த ஸ்பெயினின் KID செயற்கைக்கோள் மட்டும் தற்போது இயங்க தொடங்கியுள்ளதாக அதனை தயாரித்த OP நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் எதிர்பாராவிதமாக 3 நிமிடங்களுக்கு மேலாக KID தரவுகளை அனுப்பியது என்றும், அதன் பயணப் பாதையை மீண்டும் சீர்செய்துவருவதாகவும் தெரிவித்துள்ளது.

Similar News

News January 30, 2026

தைரியம் இருந்தால் புடின் உக்ரைன் வரலாம்: ஜெலன்ஸ்கி

image

அமைதிப் பேச்சுவார்த்தைக்காக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை ரஷ்யா மாஸ்கோவிற்கு அழைத்திருந்தது. இதனை மறுத்துள்ள ஜெலன்ஸ்கி, துணிச்சல் இருந்தால் பேச்சுவார்த்தை நடத்த புடின் உக்ரைனுக்கு வரலாம் என சவால் விடுத்துள்ளார். மேலும், ரஷ்யா தாக்குதலை நிறுத்தினால் மட்டுமே, நாங்களும் நிறுத்துவோம் எனவும் போரை முடிவுக்கு கொண்டு வரவே தாங்கள் விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

News January 30, 2026

BREAKING: தங்கம் விலை மேலும் குறைந்தது

image

ஆபரணத் தங்கம் விலை ஒரே நாளில் 2-வது முறையாக குறைந்துள்ளது. இன்று மதிய நேர நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹350 குறைந்து ₹15,850-க்கும், சவரனுக்கு ₹2,800 குறைந்து ₹1,26,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இன்று ஒரே நாளில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ₹7,600 குறைந்துள்ளதால், நகை பிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

News January 30, 2026

நான் கொச்சைப்படுத்தவில்லை: மா.சு விளக்கம்

image

தற்காலிக, ஒப்பந்த பணியாளர்கள் நிரந்தரம் கோரி போராடுவது ‘பேஷன்’ ஆகிவிட்டது என அமைச்சர் மா.சு., கூறியதற்கு <<19000579>>அண்ணாமலை <<>>கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில், போராட்டங்களை ஒருபோதும் கொச்சைப்படுத்தவில்லை என மா.சு விளக்கமளித்துள்ளார். போராட்டம் என்பது இயல்பாக நடக்க வேண்டும்; சிலர் தூண்டுதலால் நடக்க கூடாது; தேர்தல் நேரத்தில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கவே இதுபோன்ற போராட்டங்கள் நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!