News January 13, 2026
‘நான் சாகப் போறேன்.. என் சாவுக்கு காரணம் இதுதான்’

பாகுபாடு ஒழிப்பை கற்றுத்தர வேண்டிய கல்லூரியிலேயே, நிறவெறி சர்ச்சையால் மாணவி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் பல் மருத்துவம் பயின்று வந்த யஷஸ்வினியிடம், கருப்பாக உள்ள ஒருவர் எப்படி டாக்டராக முடியும் என ஆசிரியர் கேலி செய்ததாக கூறப்படுகிறது. மனமுடைந்த அவர் கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், கல்லூரி முதல்வர் உள்பட 5 பேர் மீது FIR பதிந்து போலீஸ் விசாரிக்கிறது.
Similar News
News January 30, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஊக்கமுடைமை ▶குறள் எண்: 596 ▶குறள்: உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினுந் தள்ளாமை நீர்த்து. ▶பொருள்: நினைப்பதெல்லாம் உயர்ந்த நினைப்பாகவே இருக்கவேண்டும். அது கைகூடாவிட்டாலும் அதற்காக அந்த நினைப்பை விடக்கூடாது.
News January 30, 2026
அபாயகர நோய்க்கு சிகிச்சை கண்டுபிடிப்பு!

கணையப் புற்றுநோயை குணப்படுத்த Triple Drug Therapy சிகிச்சையை ஸ்பெயினின் புகழ்பெற்ற விஞ்ஞானி மரியானோ பார்பாசிட் தலைமையிலான மருத்துவ ஆராய்ச்சி குழுவினர் கண்டறிந்துள்ளனர். எலிகள் மீது நடத்தப்பட்ட சோதனையில் கணையப் புற்றுநோயை உண்டாக்கும் KRAS மரபணுப் பாதை 3 திசைகளில் இருந்து தாக்கி அழிக்கப்பட்டதாகவும், விரைவில் மனிதர்களுக்கான மருத்துவப் பரிசோதனை தொடங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
News January 30, 2026
Best Music Director Award: சாம் முதல் AR ரகுமான் வரை!

கடந்த 2016 முதல் 2022-ம் ஆண்டுக்கான மாநில அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி சிறந்த இசையமைப்பாளருக்கான விருதினை சாம் CS முதல் ஏ.ஆர்.ரகுமான் வரை பலர் பெற்று அசத்தியுள்ளனர். யார் யார் எந்த படத்திற்காக பெற்றுள்ளனர் என்பதை வலதுபக்கம் Swipe செய்து பார்க்கலாம்.


