News January 13, 2026
திருவள்ளூர்: அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377 2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639 3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098 5.முதியோருக்கான அவசர உதவி -1253 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033 6.ரத்த வங்கி – 1910 7.கண் வங்கி -1919 8.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989! இதனை ஷேர் பண்ணுங்க மக்களே.
Similar News
News January 25, 2026
திருவள்ளூர்: மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்!

திருநின்றவூர் பிரகாஷ் நகரில் தனியாக வசித்து வரும் பார்வதி நேற்று முன்தினம் இரவு வீட்டின் கதவைத் திறந்து வைத்து டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென உள்ளே புகுந்த வாலிபர் நகைபறிப்பில் ஈடுபட்டுத் தப்பியோடினார். இதுகுறித்து அவரது மகள் ஜெயந்தி அளித்த புகாரின் பேரில், திருநின்றவூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
News January 25, 2026
திருவள்ளுர்: செல்போன் பயணிகளே உஷார்!

உங்கள் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் OTP எண்களைத் திருட சைபர் குற்றவாளிகள் ‘கால் பார்வேர்டிங்’ முறையைப் பயன்படுத்தலாம். இதைச் சரிபார்க்க உங்கள் மொபைலில் *#21# என்று டயல் செய்யுங்கள். அங்கு வேறு எண்களுக்கு ‘Forward’ ஆகிறதா என்பதை அறியலாம். அப்படித் தகவல்கள் கசிந்தால், உடனடியாக ##002# என டயல் செய்து அனைத்துப் பார்வேர்டிங் வசதிகளையும் ரத்து செய்யலாம்.
News January 25, 2026
திருவள்ளுர்: வெவ்வேறு விபத்துகளில் இருவர் பலி!

பெரியபாளையம் பகுதியில் நடந்த இரு வேறு சாலை விபத்துகளில் வாலிபர் மற்றும் பெயிண்டர் என இருவர் உயிரிழந்தனர். காய்கறி சந்தைக்குச் சென்ற புகழேந்தி (22) லாரி மோதியும், மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய பெயிண்டர் சாமிநாதன் (38) சரக்கு வேன் மோதியும் பலியாகினர். காயமடைந்த குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தப்பியோடிய ஓட்டுநர்களைப் பெரியபாளையம் போலீசார் தேடி வருகின்றனர்.


