News May 5, 2024
RCB இன்னும் ICUவில்தான் உள்ளது: ஜடேஜா

ஐபில் தொடரில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்துவந்த பெங்களூரு அணி தற்போது 3 போட்டிகளில் வெற்றிபெற்று தலை தூக்கி இருக்கிறது. இதுகுறித்து பேசியிருக்கும் இந்த அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா, “RCB வெண்டிலேட்டரில் இருந்து வெளியே வந்துவிட்டது. ஆனால், இன்னும் ஐசியுவில்தான் உள்ளது. பெங்களூரு பவுலர்கள் அசாத்திய செயலை செய்திருக்கின்றனர்.” என்று கூறியிருக்கிறார். அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுமா RCB?
Similar News
News December 8, 2025
SIR விவகாரம்: பார்லி.,யில் விவாதத்திற்கு வருகிறது

இந்திய அரசியலில் புயலை கிளப்பிவரும் SIR நடவடிக்கை குறித்து மக்களவையில் நாளை விவாதம் தொடங்கவுள்ளது. 10 மணி நேரம் நடக்கவுள்ள இந்த விவாதத்தை ராகுல் காந்தி தொடங்கவுள்ளார். அனைவரது விவாதங்களும் முன்வைக்கப்பட்ட பிறகு அதற்கு சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பதிலளிப்பார். இங்கு இந்த விவாதம் முடிந்தபிறகு டிச.10-ம் தேதி மாநிலங்களவையில் மீண்டும் விவாதம் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.
News December 8, 2025
பிரபல தமிழ் நடிகை பலாத்கார வழக்கில் பரபரப்பு தீர்ப்பு

பிரபல தமிழ் நடிகை பலாத்கார வழக்கில் மலையாள நடிகர் திலீப் குற்றவாளி இல்லை என்று எர்ணாகுளம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் குற்றவாளி என நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லாததால் திலீப் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அதே நேரத்தில், நடிகையின் கார் டிரைவர் சுனில் உள்பட குற்றம்சாட்டப்பட்ட A1- A6 ஆகியோர் குற்றவாளிகள் எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
News December 8, 2025
விஜய்யின் புதிய முயற்சி இதுவா?

தவெக கூட்டத்துக்காக புதுச்சேரி உப்பளத்தில் தடபுடலாக ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. 3 கூடுதல் நுழைவாயில்கள், தண்ணீர், நாற்காலிகள், லைட் என அனைத்தும் போடப்படும் நிலையில், ஸ்டேஜ் மட்டும் அமைக்கப்படாது என தகவல் கசிந்துள்ளது. ஏன்? கூட்டத்தில் விஜய் பேசமாட்டாரா? என கேட்க வேண்டாம். ஏனென்றால், இம்முறை விஜய் பஸ்சில் இருந்தபடியே கூட்டத்தில் பேச முடிவெடித்திருப்பதாக கூறப்படுகிறது.


