News May 5, 2024
சிறுவனின் கண்ணத்தில் கடித்த வெறிநாய்

அவிநாசி செம்பியநல்லூர் ஊராட்சி ஸ்ரீ ராம் நகர் வ உ சி வீதியை சேர்ந்தவர் கார்த்திக், மனைவி வித்யா. இவர்களுக்கு மகன் அகில்(3). இவர்கள் மூவரும் நேற்று தங்கள் வீட்டின் வாசற்படியில் உட்கார்ந்து இருந்தனர். அப்போது அங்கு வந்த தெரு நாய் ஒன்று எதிர்பாராத நேரத்தில் சிறுவன் அகில் கண்ணத்தில் கடித்து சென்றது. உடனடியாக சிறுவன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டான். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News November 4, 2025
திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நியமனம்

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக இருந்த அமைச்சர் சாமிநாதன் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக தற்போது தெற்கு மாவட்ட பொறுப்பாளராக உள்ள இல.பத்மநாபனை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
News November 4, 2025
திமுக துணை பொதுச்செயலாளராக சாமிநாதன் நியமனம்

தமிழக செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சராகவும், காங்கேயம் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ ஆகவும் இருப்பவர் சாமிநாதன். இவர் தற்போது திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக பணியாற்றி வந்த நிலையில், இன்று திமுக துணை பொதுச் செயலாளராக நியமனம் செய்து கட்சியின் பொதுச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இதனால் அமைச்சர் சாமிநாதன் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
News November 4, 2025
திருப்பூர்: 12th PASS-ஆ? ரூ.71,900 சம்பளம்

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1,429 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12-ம் வகுப்பு முடித்து 18-வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <


